சசிகலாவை தவறாக பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாது - முன்னாள் பெண் அமைச்சர் ஆவேசம் + "||" + Misrepresenting Sasikala Can't tolerate - Former female minister furious
சசிகலாவை தவறாக பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாது - முன்னாள் பெண் அமைச்சர் ஆவேசம்
சசிகலாவை பற்றி தவறாக பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஆவேசமாக பேசினார்.
சென்னை,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவதூறாக பேசியதை கண்டித்து சென்னை அரும்பாக்கத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சரையும், பெண்களையும் உதயநிதி ஸ்டாலின் தவறாக பேசியுள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். பெண்களை எவ்வளவு தரக்குறைவாக மு.க.ஸ்டாலின் குடும்பம் வைத்துள்ளது என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது. பெண்களை போதை பொருளாக நினைத்து, பெண்களுக்கு மரியாதை கொடுக்காமல், அவர்கள் மனதில் உள்ள எண்ணம்தான் வார்த்தையாக உதயநிதியிடம் இருந்து வெளிப்பட்டுள்ளது.
சசிகலா அ.தி.மு.க.வில் பொது செயலாளராக இருந்தவர். ஜெயலலிதாவோடு துணையாக இருந்து தவ வாழ்க்கை வாழ்ந்தவர். யார் எங்கே இருந்தாலும் பெண்களை தவறாக பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாது. இதுபோல அநாகரிகமாக பேசுவதை உதயநிதி நிறுத்தாவிட்டால் அனைத்து பெண்களும் ஒன்றிணைந்து போராடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டம் சசிகலாவுக்காக நடத்தப்பட்டதா? என்று கேட்டதற்கு கோகுல இந்திரா, ‘சசிகலா வயதில் முதிர்ந்தவர், அவரோடு நாங்கள் இணைந்து பணியாற்றினோம். சசிகலா காலில் முதல்-அமைச்சர் விழுந்ததை கொச்சையாக பேசியுள்ளனர். கனிமொழியை அ.தி.மு.க.வில் யாரும் தவறாக பேசுவதில்லை.