மாநில செய்திகள்

கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைப்பதால் தமிழக சட்டசபை தேர்தல் செலவு உயரும் - சத்யபிரத சாகு தகவல் + "||" + Additional polling booths will increase the cost of the Tamil Nadu Assembly elections - Satyapratha Saku Information

கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைப்பதால் தமிழக சட்டசபை தேர்தல் செலவு உயரும் - சத்யபிரத சாகு தகவல்

கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைப்பதால் தமிழக சட்டசபை தேர்தல் செலவு உயரும் - சத்யபிரத சாகு தகவல்
கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைப்பதால் தமிழக சட்டசபை தேர்தல் செலவு உயரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை, 

சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-

தமிழகத்தில் சட்டசபை தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணைய பொது செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையிலான குழு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் பல்வேறு அரசு செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி சென்றது.

அப்போது தமிழக சட்டப்பேரவை தேர்தலை நடத்துவதற்காக ரூ.621 கோடி ரூபாய் நிதி கோரியுள்ளதாக உமேஷ் சின்ஹா கூறினார். கொரோனா பரவல் காரணமாக வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது, தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் அவர்களுக்கான செலவீனங்கள் அதிகரிப்பு ஆகியவற்றினால் கூடுதல் செலவாக வாய்ப்புள்ளது. எனவே தேர்தல் செலவுத் தொகை மேலும் அதிகரிக்கக்கூடும்.

தமிழகத்தில் தற்போதுள்ள கொரோனா பரவல் நிலவரம் குறித்தும், இந்த காலத்தில் தேர்தல் நடத்தும் போது பின்பற்ற வேண்டிய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் குறித்தும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் முதல்கட்ட ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட ஆலோசனை விரைவில் நடத்தப்படும்.

இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. எனவே ஏற்கனவே திட்டமிட்டப்படி 20-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழக சட்டசபை தேர்தல் : பிப்ரவரி இறுதியில் அறிவிப்பு வெளியாகலாம்...!
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் பிப்ரவரி இறுதியில் வெளியிடலாம் என கேரள தலைமைத் தேர்தல் அலுவலர் டிக்காராம் மீனா தெரிவித்துள்ளார்.
2. தமிழகத்தில் பெரிய கட்சி என்பதால் முதலமைச்சர் வேட்பாளரை அ.தி.மு.க.வே தீர்மானிக்கும் - பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி
தமிழகத்தில் அ.தி.மு.க. பெரிய கட்சி என்பதால் முதலமைச்சர் வேட்பாளரை அ.தி.மு.க.வே தீர்மானிக்கும் என பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி கூறி உள்ளார்.
3. அதிமுக - பாமக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை : அமைச்சர்கள் தங்கமணி, கே.பி.அன்பழகன் பாமக நிறுவனர் ராமதாசுடன் விரைவில் சந்திப்பு
அதிமுக - பாமக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை அமைச்சர்கள் தங்கமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர், பாமக நிறுவனர் ராமதாஸை தைலாபுரத்தில் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
4. தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுப்பதற்கான பொறுப்பு மக்களிடம் தான் உள்ளது- தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்கா
பணப்பட்டுவாடாவை தடுக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறியதோடு,பணப்பட்டுவாடாவை தடுப்பதற்கான பொறுப்பு மக்களிடம் தான் உள்ளது என்று இந்திய தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்ஹா தெரிவித்து உள்ளார்.
5. டெலிவிஷன் நிகழ்ச்சியை சுட்டிக்காட்டி:முதல்வர் பழனிசாமி – கமல்ஹாசன் மோதல்; ரஜினிகாந்த் வருகைக்கு முன்பே சூடேறும் தேர்தல் களம்
டெலிவிஷன் நிகழ்ச்சியை பார்க்கும் குடும்பம் கூட நன்றாக இருக்காது-முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ; முதல்வரும் அந்த டெலிவிஷன் நிகழ்ச்சியை பார்க்கிறார் என்பது மகிழ்ச்சி-கமல்ஹாசன்