அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவைக் காண ராகுல்காந்தி இன்று தனி விமானத்தில் மதுரை வருகை + "||" + Rahul Gandhi arrives in Madurai today on a private plane to witness the Avaniyapuram Jallikattu festival
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவைக் காண ராகுல்காந்தி இன்று தனி விமானத்தில் மதுரை வருகை
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவைக் காண காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று தனி விமானம் மூலம் மதுரை வருகிறார்.
மதுரை,
மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் திருநாளான இன்று (வியாழக்கிழமை) ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இந்த விழாவை காண காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு இன்று பகல் 11.30 மணிக்கு வருகிறார். பின்னர் காரில் அவனியாபுரம் செல்கிறார்.
அங்கு சுமார் ஒரு மணி நேரம் தமிழர்களின் வீர விளையாட்டை மேடையில் அமர்ந்து காண்கிறார். அவருடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு காங்கிரஸ் மேற்பார்வையாளர் தினேஷ்குண்டுராவ், புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கிறார்கள். ராகுல்காந்தி பிற்பகல்2 மணிக்கு மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதிஸ்டாலினும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.