ஒரே மேடையில் அமர்ந்து ஜல்லிக்கட்டை ரசித்த ராகுல்காந்தி, உதயநிதி ஸ்டாலின் + "||" + Rahul Gandhi and Udayanithi Stalin sat on the same stage and admired Jallikattu
ஒரே மேடையில் அமர்ந்து ஜல்லிக்கட்டை ரசித்த ராகுல்காந்தி, உதயநிதி ஸ்டாலின்
ராகுல்காந்தியும், உதயநிதி ஸ்டாலினும் ஒரே மேடையில் அமர்ந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டை ரசித்து வருகின்றனர்
மதுரை:
மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் காண்பதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்திற்கு தனி விமானம் முலம் வந்திறங்கிய ராகுல் காந்தி, பின்னர் சாலை மார்க்கமாக அவனியாபுரம் சென்றடைந்தார்.
அவருடன் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, மாணிக்கம் தாகூர் எம்.பி. உள்ளிட்டோர் வருகை தந்தனர். மேலும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்வையிடுவதற்காக வந்திருந்தார். ராகுல்காந்தியும், உதயநிதி ஸ்டாலினும் ஒரே மேடையில் அமர்ந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டை ரசித்தனர்.மாடுபிடி வீரருக்கு உதயநிதி ஸ்டாலின் தங்க மோதிரம் வழங்னார்.
ராகுல் காந்தியுடன் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி, உள்ளிட்டோர் ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்தனர்
இதை தொடர்ந்து மதுரை தென்பலன்ஞ்சி கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அங்கு கிராம மக்கள் அனைவரும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்குள்ள மக்களிடம் பொங்கல் விழாவின் சிறப்புகள் குறித்து தெரிந்து கொண்ட அவர், அங்கு நடைபெற்ற சமபந்தி விருந்தில் மக்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார். மேலும் அங்குள்ள மக்களிடம் உரையாடி நலம் விசாரித்தார். இதையடுத்து அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்த ராகுல் காந்தி எம்பி மேடையில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக மக்களுக்கு வணக்கம். ஜல்லிக்கட்டில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் காலாச்சாரம், பாரம்பரியம் இன்றியமையாதது. அது மதிக்கப்பட வேண்டும். தமிழக மக்களுடன் நின்று அவர்களின் வரலாற்றை பாரம்பரியத்தை காக்க வேண்டியது என் கடமை. உங்களது உணர்வுகளையும், கலாசாரத்தையும், ரசித்து பாராட்டவே வந்துள்ளேன் என கூறினார்.
ஈரோட்டில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் பிரசாரத்துக்கு வரும் ராகுல்காந்தி இங்குள்ள காந்தி, காமராஜர், பெரியார் சிலைகள் உள்பட 8 தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய இருப்பதாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.