தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அமைத்த 4 பேர் குழுவிலிருந்து பூபேந்தர் சிங் விலகல் + "||" + Member Opts Out Of Supreme Court-Appointed Panel On Farm Laws Amid Row

வேளாண் சட்டங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அமைத்த 4 பேர் குழுவிலிருந்து பூபேந்தர் சிங் விலகல்

வேளாண் சட்டங்கள் தொடர்பாக சுப்ரீம்  கோர்ட் அமைத்த 4 பேர் குழுவிலிருந்து பூபேந்தர் சிங் விலகல்
வேளாண் சட்டங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அமைத்த 4 பேர் கொண்ட குழுவில் இருந்து பூபேந்தர் சிங் விலகியுள்ளார்.
புதுடெல்லி:

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள். விவசாயிகள் டெல்லியில் 50 நாட்களுக்கு மேலாக அறவழியில் போராடி வருகிறார்கள். இதில் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில்  நடந்து வந்தது. இந்த நிலையில் புதிய வேளாண் சட்டங்களை நீங்கள் நிறுத்தி வைக்கிறீர்களா? நாங்கள் நிறுத்தி வைக்கவா?' என மத்திய அரசிடம் கேட்டது. வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, 3 வேளாண் சட்டங்களுக்கும் சுப்ரீம் கோர்ட்  இடைக்காலத் தடை விதித்தது.

 விவசாயிகளுடன் பேசி தீர்வு காண்பதற்கு 4 பேர் கொண்ட குழுவை அமைத்தும் உத்தரவிட்டனர். இந்த குழுவில் பூபிந்தர்சிங் பால், பிரேம்குமார் ஜோஷி, அசோக் குலாரி, அனில் கான்வாட் ஆகியோர் இடம் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, விவசாயிகள் தரப்பில் சுப்ரீம்  கோர்ட்  இந்த சட்டங்களை நிறுத்தி வைத்து இருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். அதே நேரத்தில் சட்டங்களை முழுமையாக விலக்க வேண்டும் என்பதுதான் எங்களது ஒரே கோரிக்கை.  4 பேர் கொண்ட குழுவை அமைத்து இருப்பதையும் நாங்கள் ஏற்க முடியாது. சுப்ரீம் கோர்ட் அமைத்த குழுவில் இருப்பவர்கள் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்கள்  எங்கள் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். 

இந்த நிலையில், வேளாண் சட்டங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்  அமைத்த 4 பேர் கொண்ட குழுவில் இருந்து பூபேந்தர் சிங் விலகியுள்ளார். அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஒரு விவசாயியாக , ஒரு யூனியன் தலைவராகவும், பண்ணை தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்களிடையே நிலவும் உணர்வுகள் மற்றும் அச்சங்களைக் கருத்தில் கொண்டு, பஞ்சாப் மற்றும் விவசாயிகளின் நலன்களில் சமரசம் ஏற்படாதவாறு எனக்கு வழங்கப்படும் எந்தவொரு பதவியையும் தியாகம் செய்ய நான் தயாராக இருக்கிறேன். கநான் குழுவிலிருந்து விலகுகிறேன்  நான் எப்போதும் எனது விவசாயிகள் மற்றும் பஞ்சாபுடன் நிற்பேன் என்று அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. விவசாயிகள் டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக 22 வழக்குகள் பதிவு
விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2. விவசாயிகளுக்கு ஆதரவாக அரியானவை சேர்ந்த எம்.எல்.ஏ பதவி விலகல்
விவசாயிகளுக்கு ஆதரவாக அரியானவை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ பதவி விலகினார்.டிராக்டரில் சென்று தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் கொடுத்தார்.
3. வன்முறை எதிரொலி: 58 நாட்கள் நடைபெற்று வந்த விவசாயிகள் போராட்டம் வாபஸ் 2 விவசாய சங்கங்கள் திடீர் அறிவிப்பு
டெல்லியில் நடத்தி வரும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அகில இந்திய கிஷான் சங்கர்ஸ் ஒருங்கிணைப்பு குழு அறிவித்து உள்ளது
4. இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு - யாழ்ப்பாணத்திலும் போராட்டம்
இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக இலங்கை யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடைபெற்றது.
5. விவசாயிகளின் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும்: வேளாண் துறை அமைச்சர்
விவசாயிகள் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என்று வேளாண் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.