மாநில செய்திகள்

யூடியூப் சேனலில் ஆபாச பேட்டி கொடுத்து ஆண்களை உல்லாசத்துக்கு அழைத்து சவால்விட்ட பெண் கைது + "||" + Giving a porn interview on a YouTube channel Challenged woman arrested

யூடியூப் சேனலில் ஆபாச பேட்டி கொடுத்து ஆண்களை உல்லாசத்துக்கு அழைத்து சவால்விட்ட பெண் கைது

யூடியூப் சேனலில் ஆபாச பேட்டி கொடுத்து ஆண்களை உல்லாசத்துக்கு அழைத்து சவால்விட்ட பெண் கைது
சென்னையில் பெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்து யூடியூப் சேனலில் வெளியிட்ட வழக்கில், ஆண்களுக்கு சவால்விட்ட பெண் கைது செய்யப்படுகிறார். அவருக்கு சம்மன் அனுப்பி போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
சென்னை:

சென்னை பெசன்ட் நகர் மற்றும் நீலாங்கரை கடற்கரை பகுதிக்கு காற்று வாங்க சென்ற பெண்களையும், உடற் பயிற்சிக்காக நடைபயிற்சி சென்ற பெண்களையும் ஆபாசமாக பேட்டி எடுத்து, சென்னை டாக்ஸ் என்ற யூடியூப் சேனல் வெளியிட்டது.

பெண்களின் அந்தரங்கம் பற்றியும், காதல் அனுபவம் பற்றியும் இந்த பேட்டியில் கிளு, கிளுப்பான தகவல்கள் வெளியிடப்பட்டது. சில பெண்கள் தங்களது முதல் இரவு அனுபவம் பற்றியும், ஆண் நண்பர்களுடன் பழகுவது பற்றி கூட பரபரப்பான கருத்துகளை இந்த பேட்டியில் வெளியிட்டனர்.

தங்களது இந்த பேட்டி யூடியூப் சேனலில் வெளிவரப்போகிறது என்பது கூட தெரியாமல் சில அப்பாவி பெண்கள் பேட்டி கொடுத்து சிக்கலில் மாட்டிக்கொண்டனர். சென்னை டாக்ஸ் யூடியூப் சேனல் கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து இருந்து செயல்பட்டு வருகிறது. தங்களது சேனலை அதிகஅளவில் வாடிக்கையாளர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக இந்த வித்தியாசமான பேட்டியை எடுத்து ஒளிபரப்பி உள்ளனர். இதுபோல் பேட்டி கண்டு 200 வீடியோக்களாக தயாரித்து தொடர்ந்து தங்களது சேனலில் ஒளிபரப்பி உள்ளனர்.

3 பேர் கைது

பெண்களின் இந்த ஆபாச பேட்டி நிகழ்ச்சியை 7 கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர். இதன் மூலம் சென்னை டாக்ஸ் யூடியூப் சேனல் பணத்தை அள்ளி இருக்கிறது. இதன் மூலம் ஏமாற்றப்பட்ட ஏராளமான பெண்கள் சென்னை சாஸ்திரிநகர் போலீசில் புகார் கொடுத்தனர்.

சாஸ்திரிநகர் போலீசார் 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சென்னை டாக்ஸ் யூடியூப் சேனல் உரிமையாளர் தினேஷ் (வயது 31) , பெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்த நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆசின்பத்சா (23), பேட்டியை படம் பிடித்த கேமராமேன் அஜய்பாபு (24) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னை டாக்ஸ் யூடியூப் சேனல் அலுவலகத்தை சீல் வைக்கவும், அதை முடக்கவும் கோர்ட்டு மூலம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சென்னை டாக்ஸ் யூடியூப் சேனல் நிறுவனம் சில பெண்களை தினம் ரூ.1500 சம்பளம் கொடுத்து, பொதுமக்களைப்போல ஆபாசமாக பேட்டி கொடுக்க வைத்துள்ளனர்.

சவால் விட்ட பெண் கைதாகிறார்

இதுபோல ஒரு பெண் ரூ.1500 சம்பளம் பெற்றுக்கொண்டு, மிகவும் ஆபாசமாக பேட்டி கொடுத்துள்ளார். ஆண்களை பகிரங்கமாக உல்லாசத்துக்கு சைகை மூலம் அழைத்து சவால்விட்டு பேட்டி கொடுத்துள்ளார். அவரது பேட்டி, சென்னை டாக்ஸ் யூடியூப் சேனலில் தலைப்பு பேட்டியாக ஒளிபரப்பப்பட்டுள்ளது. அவரது பேட்டியை காட்டி ஏராளமான அப்பாவி பெண்களை ஏமாற்றி பேட்டி எடுத்துள்ளனர். அவரது பேட்டி மற்ற பெண்களை பேட்டி கொடுக்க தூண்டும் வகையில் உள்ளது.

அந்த பெண்ணை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்துள்ளனர். அடையாறு துணை கமிஷனர் விக்ரமன், உதவி கமிஷனர் கவுதமன் ஆகியோர் மேற்பார்வையில், சாஸ்திரிநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பலவேசம் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

கமிஷனர் எச்சரிக்கை

போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று அளித்த பேட்டி ஒன்றில், ஆபாச நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் யூடியூப் சேனல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.