தேசிய செய்திகள்

டெல்லியில் முன்விரோதம் காரணமாக 2 சிறுவர்களால் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லபட்ட வியாபாரி + "||" + Caught On CCTV: Delhi Murder As Children Skated Past In Busy Locality

டெல்லியில் முன்விரோதம் காரணமாக 2 சிறுவர்களால் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லபட்ட வியாபாரி

டெல்லியில் முன்விரோதம் காரணமாக 2 சிறுவர்களால் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லபட்ட வியாபாரி
டெல்லியில் முன்விரோதம் காரணமாக சிறுவர்கள் 2 பேர் சேர்ந்து கடை வியாபாரியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
புதுடெல்லி

டெல்லியின் ஜாப்ராபாத் பகுதியை சேர்ந்த கடை வியாபாரி ரெய்ஸ் அன்சாரி இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் 2 பேருக்கும் இடையே முன்விரதம் இருந்து வந்துள்ளது.

இதனால்  ஆத்திரத்தில் இருந்த சிறுவர்கள், சனிக்கிழமை இரவு அன்சாரி  தனது ஸ்கூட்டரை துடைத்து கொண்டு இருந்த  போது முகமூடி அணிந்து ஸ்கேட்டிங் செய்தபடி வந்து சர்வ சாதாரணமாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அங்கிருந்த சிசிடிவிக்களை ஆய்வு செய்து தப்பியோடிய சிறுவர்களை கைது செய்து, துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஹரியானாவில் பட்டப்பகலில் இளம்பெண் சுட்டுக்கொலை; 2 பேர் கைது
ஹரியானாவில் இரண்டு வாலிபர்கள் பட்டப்பகலில் இளம்பெண் ஒருவரை சுட்டுகொன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2. கட்சிரோலியில் போலீசாருடன் துப்பாக்கி சண்டை 5 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
கட்சிரோலியில் போலீசாருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 5 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
3. இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லக்கா கூட்டாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
அங்கொட லொக்காவின் கூட்டாளியான அசித்த ஹேமதிலக்க இலங்கை போலீசார் நடத்திய என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
4. ஈராக்கில் 2 ராணுவ அதிகாரிகள் சுட்டுக்கொலை: ஐ.எஸ். பயங்கரவாதிகள் அட்டுழியம்
ஈராக்கில் 2 ராணுவ அதிகாரிகள், ஐ.எஸ். பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.