தமிழகம் பெரிய வளர்ச்சி அடைந்து உள்ளது; அதற்கு பிரதமர் மோடி உறுதுணையாக இருந்து உள்ளார் - நம்ம ஊர் பொங்கல் விழாவில் ஜே.பி.நட்டா + "||" + Tamil Nadu takes a big leap as far as development is concerned:
BJP President JP Nadda
தமிழகம் பெரிய வளர்ச்சி அடைந்து உள்ளது; அதற்கு பிரதமர் மோடி உறுதுணையாக இருந்து உள்ளார் - நம்ம ஊர் பொங்கல் விழாவில் ஜே.பி.நட்டா
தமிழகம் பெரிய வளர்ச்சி அடைந்து உள்ளது. அதற்கு பிரதமர் மோடி உறுதுணையாக இருந்து உள்ளார் என நம்ம ஊர் பொங்கல் விழாவில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசினார்.
சென்னை
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,பொங்கல் விழா மற்றும் துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக பா.ஜனதா தேசிய தலைவர் இன்று சென்னை வந்தார்.
சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு பா.ஜனதா மாநில தலைவர் முருகன் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னை மதுரவாயல் ஆலப்பாக்கம் சாலை சீமாத்தம்மன் நகா் பகுதியில் நடைபெற்ற நம்ம ஊர் பொங்கல் விழாவில் வேட்டி, சட்டையுடன் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார் . விழாவில் பா.ஜனதா தமிழக தலைவர் எல்.முருகன், சி.டி.ரவி, வானதி சீனிவாசன், இல.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
விழாவில் ஜே.பி.நட்டா பேசும் போது கூறியதாவது:-
தமிழ்நாடு வளமான கலாச்சாரத்தைக் கொண்டுள்ளது, தமிழ்நாடு பக்தி நிறைந்த மாநிலம். மத உணர்வுகள் மதத் தலைவர்கள் மற்றும் புனிதர்களால் பேணப்பட்ட மாநிலமாகும். நாடு முழுவதும் முன்னேற்றம் அடைவதை பிரதமர் மோடி பார்க்க விரும்புகிறார். தமிழகம் பெரிய வளர்ச்சி அடைந்து உள்ளது. அதற்கு பிரதமர் மோடி உறுதுணையாக இருந்து உள்ளார் என கூறினார்.
பொங்கல் விழா நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, சென்னை சேப்பாக்கம் கலைவாணா் அரங்கத்தில் நடைபெறவுள்ள துக்ளக் பத்திரிகை ஆண்டு விழாவில் ஜே.பி.நட்டா பங்கேற்கிறாா். இதன்பின்பு, விமானம் மூலம் இரவு 9 மணியளவில் டெல்லி செல்ல உள்ளாா்.