மாநில செய்திகள்

மக்கள் நீதி மய்யத்துக்கு மீண்டும் கிடைத்த டார்ச் லைட் சின்னம் நன்றி தெரிவித்தார் கமல்ஹாசன் + "||" + 8754370_Torchlight symbol returned to People's Justice Center

மக்கள் நீதி மய்யத்துக்கு மீண்டும் கிடைத்த டார்ச் லைட் சின்னம் நன்றி தெரிவித்தார் கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யத்துக்கு மீண்டும் கிடைத்த டார்ச் லைட் சின்னம் நன்றி தெரிவித்தார் கமல்ஹாசன்
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள கட்சிகளுக்கு சமீபத்தில் சின்னங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. சீமானின் நாம் தமிழர் கட்சி, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. உள்ளிட்ட சில கட்சிகளுக்கு தமிழகத்தில் அவர்கள் கேட்ட சின்னம் கிடைத்தது.

சென்னை,

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள கட்சிகளுக்கு சமீபத்தில் சின்னங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. சீமானின் நாம் தமிழர் கட்சி, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. உள்ளிட்ட சில கட்சிகளுக்கு தமிழகத்தில் அவர்கள் கேட்ட சின்னம் கிடைத்தது.

ஆனால், கமல்ஹசான் தனது மக்கள் நீதி மய்யத்துக்கு கேட்ட டார்ச் சின்னத்தை, புதுச்சேரிக்கு மட்டும் ஒதுக்கி விட்டு தமிழகத்தில் ஒதுக்கவில்லை. டார்ச் சின்னத்தை வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கி விட்டது. இதனால் இது குறித்து கமல்ஹாசன் சார்பில் தலைமை தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதனிடையே டார்ச் லைட் சின்னத்தை பெற்ற கட்சி, திடீரென அந்த சின்னத்தை வேண்டாம் என்று ஒதுக்கியது.

இந்நிலையில், கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டர் பதிவில், “மக்கள் நீதி மய்யத்துக்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்ச போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்தநாளில் இது நிகழ்ந்திருக்கிறது. இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், எம்மோடு துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஒளி பரவட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. சட்டப்பேரவை தேர்தல்: கமல்ஹாசனுடன் சரத்குமார் சந்திப்பு
சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளநிலையில், கமல்ஹாசனை சந்திப்பதற்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வருகை தந்துள்ளார்.
2. தமிழக மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் எங்களிடம் வரலாம்:கமல்ஹாசன்
தமிழக மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் எங்களிடம் வரலாம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
3. தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் 21-ந் தேதி முதல் விருப்ப மனு கமல்ஹாசன் அறிவிப்பு
தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் 30 சட்டமன்ற தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான பணிகளைத் தொடங்கி விட்டோம்.
4. பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வு : மத்திய அரசு மக்களின் மீது நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் - கமல்ஹாசன்
பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வு ஆகியவை மத்திய அரசு மக்களின் மீது நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
5. அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக மக்கள் நீதி மய்யத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் கமல்ஹாசன் பேச்சு
அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக மக்கள் நீதி மய்யத்தை மக்களிடம் கொண்டு செல்லுங்கள் என்று நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் பேசி உள்ளார்.