மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார் + "||" + Chief Minister Palanisamy launched the corona vaccination program in Tamil Nadu

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை மதுரையில் முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
மதுரை,

இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவிஷில்டு’ என்ற கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது. இந்த தடுப்பூசியை மத்திய அரசு அதிக அளவில் கொள்முதல் செய்து ஒவ்வொரு மாநிலங்களுக்கும் அனுப்பி உள்ளது. நாடு முழுவதும் இந்த தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக இன்று தொடங்கி வைத்தார். 

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில முதலமைச்சர்கள் தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்கள். அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். 

தமிழகத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் 14 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது. கோவையில் 4, மதுரையில் 5, திருச்சி 5, சேலத்தில் 7 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. தமிழகத்தில் முதல் தடுப்பூசி அரசு மருத்துவர் செந்திலுக்கு போடப்பட்டது. அதனை தொடர்ந்து மருத்துவ, சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கொரோனா தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்த பின் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி திட்டத்தை விரைவாக செயல்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி 2 கட்டங்களாக போடப்படும் எனவும் முதல் தடுப்பூசிக்கு பிறகு 28 நாட்கள் கழித்து 2வது தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 10 லட்சம் வழக்குகள் வாபஸ் - பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பாராட்டு
தமிழகத்தில் கொரோனா விதிமீறல் தொடர்பான வழக்குகள் ரத்து செய்யப்பட்டது குறித்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தமிழக அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.
2. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்வு; முழுமையான சேவைக்கு அனுமதி
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டு முழுமையான விமான சேவைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
3. தமிழகத்தில் 15-வது நாளாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-க்கும் குறைவு
தமிழகத்தில் கடந்த 15 நாட்களாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை 500-க்கும் குறைவாகவே உள்ளது.
4. தமிழகத்தில் 2-ம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியது
தமிழகத்தில் 615 மையங்களில் 2-ம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
5. பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 64 காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
தமிழகத்தில் உடல்நலக்குறைவு, விபத்துகளில் உயிரிழந்த 64 காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை