மாநில செய்திகள்

சென்னை-கெவாடியா இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் + "||" + New express train between Chennai-Kevadia: PM Modi launches

சென்னை-கெவாடியா இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

சென்னை-கெவாடியா இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
சென்னை-கெவாடியா இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை, காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
சென்னை, 

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து குஜராத்தில் உள்ள கெவாடியா ரெயில் நிலையத்துக்கு 6 எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் கெவாடியா-பிரதாப் நகர் இடையே எம்.இ.எம்.யு. ரெயில்களின் சேவைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்க உள்ளது.

சென்னை-கெவாடியா இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலின் தொடக்க நிகழ்ச்சி இன்று காலை 11 மணி அளவில் சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் நடைபெற உள்ளது. இந்த ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அ.தி.மு.க. எம்.பி. நவநீதகிருஷ்ணன், தி.மு.க. எம்.பி.க்கள் தயாநிதிமாறன், டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, பி.வில்சன், எம்.எல்.ஏ.க்கள் பி.கே.சேகர்பாபு, கே.எஸ்.ரவிசந்திரன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பிப்ரவரி 25: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை எந்த மாற்றமுமின்றி, நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
2. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை எந்த மாற்றமுமின்றி, நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
3. சென்னையில் தொழிற்சாலை அமைக்க முன்வந்துள்ள அமேசான் நிறுவனத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி வரவேற்பு
சென்னையில் மின்னணு சாதனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க முன்வந்துள்ள அமேசான் நிறுவனத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
4. சென்னை சேப்பாக்கத்தில் 2-வது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2-வது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நடைபெற்றது.
5. சென்னை - மதுரை தேஜஸ் ரயில் ஏப்ரல் 4 முதல் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் - ரயில்வே நிர்வாகம்
சென்னை - மதுரை தேஜஸ் ரயில் ஏப்ரல் 4-ம் தேதி முதல் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.