மாநில செய்திகள்

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் 3 நாட்களில் ரூ.589 கோடிக்கு மது விற்பனை + "||" + Liquor sales in Tamil Nadu for Rs 589 crore in 3 days on the occasion of Pongal festival

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் 3 நாட்களில் ரூ.589 கோடிக்கு மது விற்பனை

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் 3 நாட்களில் ரூ.589 கோடிக்கு மது விற்பனை
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளில் 3 நாட்களில் ரூ.589 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
சென்னை,

போகி பண்டிகை, பொங்கல் மற்றும் காணும் பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளில் 3 நாட்களில் ரூ.589 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போகி பண்டிகையன்று 147 கோடியே 75 லட்சம் ரூபாய், 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகையன்று 269 கோடியே 43 லட்சம் ரூபாய் என 2 நாட்களில் மொத்தம் 417 கோடியே 18 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனையாகி இருந்தது.

கடந்த 13 ஆம் தேதி போகி பண்டிகையன்று சென்னையில் ரூ.39.8 கோடி, திருச்சியில் ரூ.29.23 கோடி, சேலத்தில் ரூ.26.72 கோடி, மதுரையில் ரூ.28.15 கோடி, கோவையில் ரூ.24.57 கோடி என மொத்தம் ரூ.147.75 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. 

இதையடுத்து 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகையன்று சென்னையில் ரூ.54.47 கோடி, திருச்சியில் ரூ.56.39 கோடி, சேலத்தில் ரூ.53.18 கோடி, மதுரையில் ரூ.55.25 கோடி, கோவையில் ரூ.50.18 கோடி என மொத்தம் ரூ.269.43 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து 15 ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்பதால் 16 ஆம் தேதியான இன்று காணும் பொங்கல் தினத்தையொட்டி, சென்னையில் 38 கோடி, திருச்சியில் 36 கோடி, சேலத்தில் 32 கோடி, மதுரையில் 34 கோடி, கோவையில் 30 கோடி என மொத்தம் 172 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது. 

இந்த விவரங்களின் மூலம் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 13, 14 மற்றும் 16 ஆகிய மூன்று தேதிகளில் தமிழகத்தில் மொத்தம் 589 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது சுமார் 600 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி இருந்தது. இந்த ஆண்டு கொரோனா காலகட்டம் என்பதால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மது விற்பனை சற்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. பொங்கல் பண்டிகையையொட்டி கடையில் வாங்கி வந்த இனிப்பு சாப்பிட்ட அக்காள், தம்பி உயிரிழப்பு
பொங்கல் பண்டிகையையொட்டி கடையில் வாங்கி வந்த இனிப்பு சாப்பிட்ட அக்காள்-தம்பி பரிதாபமாக உயிரிழந்தனர்.
2. பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கம்: போக்குவரத்து துறைக்கு ரூ.5½ கோடி வருவாய்
பொங்கல் பண்டிகையையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் 5 லட்சத்து 6 ஆயிரத்து 721 பயணிகள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதன் மூலம் ரூ.5 கோடியே 46 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
3. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 நாட்களில் ரூ.417 கோடிக்கு மது விற்பனை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் தமிழகத்தில் 417 கோடி ருபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.
4. தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்
தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டுவருகிறது.
5. சொந்த ஊரில் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொந்த ஊரில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்