மாநில செய்திகள்

பொங்கல் பண்டிகையையொட்டி கடையில் வாங்கி வந்த இனிப்பு சாப்பிட்ட அக்காள், தம்பி உயிரிழப்பு + "||" + Brother and sister dies after eating sweets bought at Pongal festival shop

பொங்கல் பண்டிகையையொட்டி கடையில் வாங்கி வந்த இனிப்பு சாப்பிட்ட அக்காள், தம்பி உயிரிழப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி கடையில் வாங்கி வந்த இனிப்பு சாப்பிட்ட அக்காள், தம்பி உயிரிழப்பு
பொங்கல் பண்டிகையையொட்டி கடையில் வாங்கி வந்த இனிப்பு சாப்பிட்ட அக்காள்-தம்பி பரிதாபமாக உயிரிழந்தனர்.
செங்கம், 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் உள்ள நரசிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி (வயது 29), கூலித்தொழிலாளி. இவருக்கு பாஞ்சாலை (25) என்ற மனைவி, ஆஷானி (4) என்ற மகளும், ஹரி (3) என்ற மகனும் உண்டு.

பொங்கல் பண்டிகையையொட்டி பழனி தனது குழந்தைகளுக்கு கடைவீதியில் விற்ற இனிப்பு வகைகளை வாங்கி வந்து கொடுத்துள்ளார். அவர் வாங்கி வந்த இனிப்பு வகைகளை இரு குழந்தைகளும் சாப்பிட்டுள்ளனர். இதனால் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மயக்கம் அடைந்தனர்.

அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தங்களின் இரு குழந்தைகளையும் சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்க ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஆஷானி பரிதாபமாக உயிரிழந்தாள்.

கவலைக்கிடமாக இருந்த ஹரியை மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஹரி பரிதாபமாக உயிரிழந்தான். இரு குழந்தைகளும் உயிரிழந்ததைப் பார்த்து பெற்றோரும், கிராம மக்களும் கதறி அழுதனர்.

இதுகுறித்து விசாரித்தபோது, தரமற்ற பழைய இனிப்பு வகைகளை குழந்தைகள் சாப்பிட்டதால் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.

இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் 3 நாட்களில் ரூ.589 கோடிக்கு மது விற்பனை
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளில் 3 நாட்களில் ரூ.589 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
2. பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கம்: போக்குவரத்து துறைக்கு ரூ.5½ கோடி வருவாய்
பொங்கல் பண்டிகையையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் 5 லட்சத்து 6 ஆயிரத்து 721 பயணிகள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதன் மூலம் ரூ.5 கோடியே 46 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
3. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 நாட்களில் ரூ.417 கோடிக்கு மது விற்பனை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் தமிழகத்தில் 417 கோடி ருபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.
4. தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்
தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டுவருகிறது.
5. சொந்த ஊரில் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொந்த ஊரில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்