தேசிய செய்திகள்

டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு + "||" + Chief Minister Palanisamy meets Prime Minister Modi in Delhi

டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு

டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடியை முதலமைச்சர் பழனிசாமி பிரதமர் இல்லத்தில் சந்தித்தார்.
சென்னை, 

தமிழக சட்டசபைக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் அரசியல் களம், முன்னெப்போதும் இல்லாத வகையில் பரபரப்பாகி வருகிறது. இந்த பரபரப்பான சூழலில், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் பயணமாக டெல்லிக்கு நேற்று விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

அவருடன் அமைச்சர் ஜெயக்குமார், தமிழக அரசு தலைமைச் செயலாளர் க.சண்முகம், முதல்-அமைச்சரின் செயலாளர்கள் சாய்குமார், செந்தில்குமார் ஆகியோரும் சென்றனர். நேற்று பகல் 3 மணிக்கு டெல்லி சென்றடைந்த முதலமைச்சர் பழனிசாமி, இரவு 7.30 மணிக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் இல்லத்துக்கு சென்று, அவரை சந்தித்து பேசினார்.

இதனை தொடர்ந்து இன்று பிரதமர் நரேந்திர மோடியை பிரதமர் இல்லத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். புத்தாண்டில் முதல் முறையாக பிரதமர் மோடியை சந்தித்துள்ள எடப்பாடி பழனிசாமி, அவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பின் போது அரசியல் ரீதியில் கூட்டணி விவகாரங்கள்,தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், தமிழக திட்டங்களுக்கு கூடுதல் நிதி வழங்க பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் இன்று மேலும் 240 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்
டெல்லியில் இன்று மேலும் 240 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
2. டெல்லியில் மேலும் 217-கொரோனா தொற்று
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 217- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. டெல்லியில் இன்று மேலும் 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
4. டெல்லியில் புதிதாக 200 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 2 பேர் பலி
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 200 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. டெல்லியில் இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்
பெட்ரோல், டீசல் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த சில நாட்களாகவே உயர்ந்து வருகிறது.