மாநில செய்திகள்

தமிழகத்தில் 10, 12-ம் வகுப்புகள் தொடக்கம் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு உற்சாகத்துடன் வந்த மாணவ-மாணவிகள் + "||" + 8796853_In Tamil Nadu, schools will be opened 10 months after the commencement of 10th and 12th classes

தமிழகத்தில் 10, 12-ம் வகுப்புகள் தொடக்கம் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு உற்சாகத்துடன் வந்த மாணவ-மாணவிகள்

தமிழகத்தில் 10, 12-ம் வகுப்புகள் தொடக்கம் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு உற்சாகத்துடன் வந்த மாணவ-மாணவிகள்
தமிழகத்தில் 10 மாத காலத்துக்கு பிறகு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் வந்தனர்.

சென்னை,

தமிழகத்தில் 10 மாத காலத்துக்கு பிறகு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் வந்தனர். 10, 12-ம் வகுப்புகள் தொடங்கியதால் மாணவர்கள் நீண்ட நாட்கள் பிறகு ஆசிரியர்கள், நண்பர்களை பார்த்ததில் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

10 மாதங்களுக்கு பிறகு...

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்த நிலையில் பள்ளிகள் திறக்கப்படுமா என்பதே கேள்விக்குறியானது. இதையடுத்து 2020-21-ம் கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்லைன் வழியாகவும், கல்வி தொலைக்காட்சி மற்றும் யூடியூப் மூலமாகவும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகளை நடத்த பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டது. இதற்கு பெரும்பாலான பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முடிவு கைவிடப்பட்டது.

பள்ளிகள் திறப்பு

தற்போது 10, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில் பள்ளிகளை திறக்க கல்வித்துறை முடிவு செய்தது. அதன்படி 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகளை திறப்பது குறித்து கடந்த 6, 7, 8-ந்தேதிகளில் பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டது.

இதில் பெரும்பாலான பெற்றோர்கள், பள்ளிகளை திறக்கும் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து நேற்று 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டன. 10 மாத காலத்துக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் வந்தனர். பள்ளி நுழைவு வாயிலில் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. கைகளை சுத்தப்படுத்த கிருமிநாசினி அளிக்கப்பட்டது.

சமூக இடைவெளி

சமூக இடைவெளியை கடைபிடிக்க 6 அடி இடைவெளியில் வட்டம் வரையப்பட்டுள்ளது. நண்பர்கள், ஆசிரியர்களை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி என்று மாணவர்கள் தெரிவித்தனர். பெற்றோரின் இசைவு கடிதத்துடன் விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர்.

மாணவர்களுக்கு தேவையான சத்து மாத்திரைகள் வினியோகிக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மாவட்ட வாரியாக குழு அமைத்து கண்காணிக்கப்படுகிறது.

மாணவ-மாணவிகள் கருத்து

பள்ளிக்கு வந்த சென்னை அம்பத்தூரை சேர்ந்த மாணவி ஒரு மாணவி கூறுகையில், “கடந்த 10 மாதங்களாக வீட்டிலேயே சிறைப்பட்டு கிடந்தோம். கொரோனா நோய் தொற்றின் காரணமாக தோழிகள் மற்றும் உறவினர்கள் வீட்டுக்கு கூட எங்கள் பெற்றோர் எங்களை அனுமதிக்கவில்லை. சிறையில் இருந்து விடுபட்ட பறவையை போல எங்கள் தோழிகளை காண பள்ளிக்கு வந்திருக்கிறோம். இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

செங்கல்பட்டை  சேர்ந்த அரசு பள்ளி மாணவர் கூறுகையில், “நான் கிராமப்புறத்தில் இருப்பதால் எனக்கு சரிவர இணைய இணைப்பு கிடைக்காமல் ஆன்லைன் வகுப்பை கவனிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தேன். என்னுடைய சந்தேகங்களை கேட்க முடியாமலும் சிரமப்பட்டு வந்தேன். தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டது மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்னுடைய நண்பர்களை நேரில் பார்த்ததில் சந்தோசம் அடைந்தேன்” என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. மும்பையில் கொரோனா தடுப்பூசி போட அலைமோதிய கூட்டம்
மராட்டியத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மக்கள் தடுப்பூசி போட அதிக ஆர்வம் காட்டுவது தெரியவந்துள்ளது.
2. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 175- பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 175- பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கேரளாவில் மேலும் 1,938- பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,938- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11.46 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11.46- கோடியாக உயர்ந்துள்ளது.
5. இங்கிலாந்தில் 6 பேருக்கு பிரேசிலில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா
இங்கிலாந்தில் 6 பேருக்கு பிரேசிலில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.