தேசிய செய்திகள்

புதிய வேளாண் சட்டம் விவசாயத்தை அழிக்கும் ராகுல்காந்தி குற்றச்சாட்டு + "||" + 8799632_The new agricultural law will destroy agriculture-Congress leader Rahul Gandhi

புதிய வேளாண் சட்டம் விவசாயத்தை அழிக்கும் ராகுல்காந்தி குற்றச்சாட்டு

புதிய வேளாண் சட்டம் விவசாயத்தை அழிக்கும் ராகுல்காந்தி குற்றச்சாட்டு
புதிய வேளாண் சட்டம் விவசாயத்தை அழிக்கும் என ராகுல்காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.

புதுடெல்லி,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டம் விவசாயத்தை அழிக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

விவசாயம் அழியும்

டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதிய வேளாண் சட்டங்கள் வேளாண் துறை முழுவதையும் 3 முதல் 4 முதலாளிகளின் வசம் ஒப்படைக்கிறது. வேளாண் துறையை அழிப்பதற்கான நோக்கத்திலேயே வேளாண் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 100 சதவீதம் நான் விவசாயிகளை ஆதரிக்கிறேன்.

விவசாயிகளுக்கு ஒவ்வொரு குடிமகனும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். அரசின் நடவடிக்கையால் இளைஞர்களின் எதிர்காலம் நிச்சயமற்ற நிலையில் உள்ளது. மத்திய அரசு பிரச்சினைகளை புறம் தள்ளி மக்களை திசை திருப்புகிறது.

சீனாவுக்கு பதிலடி

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசத்துக்கு உட்பட்ட பகன்சிரி மாவட்டத்தின் சாரிசூ ஏரிக்கரை பகுதி பல ஆண்டுகளாக இந்தியா- சீனா இடையிலான சர்ச்சைக்குரிய பகுதியாக உள்ளது. இங்கு இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 4.5 கி.மீ. தொலைவுக்கு சீன ராணுவம் புதிதாக கிராமத்தை உருவாக்கி உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

அவற்றை மத்திய அரசு தொடா்ந்து மறுத்து வந்த நிலையில், அருணாசலபிரதேசத்தில் பல வீடுகள் அடங்கிய புதிய கிராமத்தை சீனா உருவாக்கியுள்ளதாக செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியாகின. இந்த செயற்கைகோள் புகைப்படத்தை பாதுகாப்புத்துறை சார்ந்த பல்வேறு நிபுணர்களும் தற்போது உறுதி செய்துள்ளனர்.

இந்தியா சரியான பதிலடி தராவிட்டால் சீனா அத்துமீறலை நிறுத்தாது. உலக வரைப்படத்தை மாற்ற சீனா விரும்புகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.


தொடர்புடைய செய்திகள்

1. தூத்துக்குடி மாவட்டத்தில் ராகுல்காந்தி நாளை பிரசாரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் ராகுல்காந்தி நாளை (சனிக்கிழமை) தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
2. வெகுநாள் கனவு நனவானது மீனவர்களுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ராகுல்காந்தி
மீனவர்களுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ராகுல்காந்தி வெகுநாள் கனவு நனவானது என கூறி உள்ளார்.
3. ராகுல்காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் மே 15-ந் தேதி விசாரணை
ராகுல்காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் மே 15-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது.
4. வேளாண் சட்டங்களால் அதிருப்தி பஞ்சாபில் மகனுடன் விவசாயி தற்கொலை
மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப்பெறாததால் மன உளைச்சலில் பஞ்சாபில் மகனுடன் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
5. முன்னாள் மத்திய மந்திரி மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி
முன்னாள் மத்திய மந்திரி இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட ராகுல் காந்தி அவரது உடலை சுமந்து சென்றார்.