கோவில்களுக்கு சொந்தமான சொத்துகளை மீட்க கோரி வழக்கு: அறநிலையத்துறை பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு + "||" + Case seeking recovery of property belonging to temples: Tribunal orders court order to respond
கோவில்களுக்கு சொந்தமான சொத்துகளை மீட்க கோரி வழக்கு: அறநிலையத்துறை பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
பெரம்பூரில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான சொத்துகளை மீட்க கோரிய வழக்கு தொடர்பாக, அறநிலையத்துறை பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
ஐகோர்ட்டில் தேவராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “சென்னை பெரம்பூரில் உள்ள ஆனந்தீஸ்வரர் மற்றும் பழனியாண்டவர் கோவில்களுக்கு சுமார் ரூ.1,000 கோடிக்கு மேல் சொத்துகள் உள்ளன. இந்த கோவில்களுக்கு சொந்தமான நிலங்களையும், குளங்களையும் பலர் ஆக்கிரமித்துள்ளனர்.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலங்களையும், குளங்களையும் மீட்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் புகார் அனுப்பியும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்த இரு கோவிகளுக்கும் சொந்தமான சொத்துகளை மீட்கவும், அங்கு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சத்திகுமார் சுகுமார குரூப் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் 4 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் வெவ்வேறு தீர்ப்பை அளித்துள்ளதால், இந்த வழக்கு 3-வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கான இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் உள்பட 9 பேர் மீது தி.மு.க. தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் அவர்கள் பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் இருந்து துபாய் நகருக்கு வந்த பயணிகள் பஸ் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி சாலையின் தகவல் பலகையின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து ஷேக் முகம்மது பின் ஜாயித் சாலையில் ஏற்பட்டது. மொத்தம் 17 பயணிகள் இந்த விபத்தில் பலியானார்கள்.