மாநில செய்திகள்

சென்னை ஆஸ்பத்திரியில் கமல்ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை: நலமாக இருப்பதாக டாக்டர் தகவல் + "||" + Kamal Haasan undergoes leg surgery at Chennai Hospital: The doctor informed me that I was fine

சென்னை ஆஸ்பத்திரியில் கமல்ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை: நலமாக இருப்பதாக டாக்டர் தகவல்

சென்னை ஆஸ்பத்திரியில் கமல்ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை: நலமாக இருப்பதாக டாக்டர் தகவல்
சென்னை ஆஸ்பத்திரியில் நடிகர் கமல்ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் நலமாக இருப்பதாக டாக்டர் தெரிவித்துள்ளார்.
சென்னை, 

சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் கடந்த மாதம் மதுரையில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். 5 கட்ட பிரசாரம் முடிந்தநிலையில், உடல்நிலை கோளாறு காரணமாக அவர் தனது பிரசாரத்தை ஒத்திவைத்தார்.

இதுகுறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் காலில் ஒரு அறுவை சிகிச்சை செய்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக இன்னொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது இருக்கிறது. எனவே ஒரு சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறேன். சில நாட்கள் ஓய்வுக்கு பின் மீண்டும் என் பணிகளை புதிய விசையுடன் தொடர்வேன்' என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில் சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ மையத்தில் கமல்ஹாசனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மருத்துவ மைய இயக்குனர் டாக்டர் சுஹாஸ் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கால் எலும்பு அறுவை சிகிச்சைக்கு பிறகு ஏற்பட்ட சிறுதொற்றை நீக்கும் அறுவை சிகிச்சை கமல்ஹாசனுக்கு இன்று (நேற்று) ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ மையத்தில் செய்யப்பட்டது. அவர் நலமாக தேறி வருகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கமல்ஹாசனின் மகள்களும், நடிகைகளுமான சுருதிஹாசன், அக்‌ஷராஹாசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் எங்கள் அப்பாவுக்கு (கமல்ஹாசன்) காலில் சர்ஜரி' வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அப்பா நலமாக உற்சாகமாக இருக்கிறார். அப்பாவை மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும், மருத்துவமனை நிர்வாகமும் நல்லமுறையில் பார்த்து கொள்கிறார்கள். 4 அல்லது 5 நாட்களுக்கு பிறகு அப்பா வீடு திரும்புவார். சில நாட்கள் ஓய்வுக்கு பின் மீண்டும் மக்களை சந்திப்பார், மகிழ்விப்பார். அனைவரது அன்பிற்கும், பிரார்த்தனைகளுக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. குஜராத்தில் ஆம் ஆத்மி வெற்றி: உடைக்க முடியாத இரும்புக் கோட்டை என்று ஜனநாயகத்தில் எதுவும் இல்லை - கமல்ஹாசன்
குஜராத்தில் ஆம் ஆத்மி வென்றுள்ள இடங்கள், உடைக்க முடியாத இரும்புக் கோட்டை என்று ஜனநாயகத்தில் எதுவும் இல்லை என்பதைக் காட்டுவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
2. மக்களின் மீது மத்திய அரசு சர்ஜிக்கல் ஸ்டிரைக்: சிலிண்டர் விலை உயர்வு குறித்து கமல்ஹாசன் விமர்சனம்
மக்களின் மீது மத்திய அரசு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியிருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.
3. அதிமுக, திமுக ஆட்சிக்கு எதிராக நாம் மாற்றத்தை கொண்டு வர உழைக்க வேண்டும் - கமல்ஹாசன்
அதிமுக, திமுக ஆட்சிக்கு எதிராக நாம் மாற்றத்தை கொண்டு வர உழைக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
4. நேர்மைக்கும், ஊழலுக்கும் நடக்கும் இந்த போட்டியில் நீதியின் பக்கம் மக்கள் நிற்க வேண்டும்: கமல்ஹாசன்
நேர்மைக்கும், ஊழலுக்கும் நடக்கும் இந்த போட்டியில் நீதியின் பக்கம் மக்கள் நிற்க வேண்டும் என்று ஈரோட்டில் கமல்ஹாசன் பேசினார்.
5. தமிழகத்தில் பெரிய கட்சி என்பதால் முதலமைச்சர் வேட்பாளரை அ.தி.மு.க.வே தீர்மானிக்கும் - பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி
தமிழகத்தில் அ.தி.மு.க. பெரிய கட்சி என்பதால் முதலமைச்சர் வேட்பாளரை அ.தி.மு.க.வே தீர்மானிக்கும் என பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி கூறி உள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை