தேசிய செய்திகள்

வருகிற 30-ந் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசனை + "||" + 8808006_An all-party meeting chaired by Prime Minister Modi will be held on the 30th

வருகிற 30-ந் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசனை

வருகிற 30-ந் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசனை
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29-ந் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க வருகிற 30-ந் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் டெல்லியில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த நிதியாண்டு ரத்து செய்யப்பட்டது. குளிர்காலக் கூட்டத் தொடரை பட்ஜெட் கூட்டத்தொடரோடு சேர்த்து நடத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு எம்.பி.க்களிடம் கடிதம் மூலம் தெரிவித்தது.

கொரோனா தொற்றுக்கு மத்தியில் கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரை மத்திய அரசு நடத்தி எம்.பி.க்கள், நாடாளுமன்ற ஊழியர்கள், பாதுகாவலர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டனர். இதனால், முன்னதாகவே கூட்டத்தொடர் நிறைவடைந்தது.

அதேபோன்ற சூழல் இந்த முறையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால், கூட்டத்தொடர் நடத்துவது குறித்து மத்திய அரசு மிகவும் கவனத்துடன் ஆலோசித்து குளிர்காலக் கூட்டத்தொடரை ரத்து செய்தது.

பட்ஜெட் கூட்டத் தொடர்

இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை வரும் 29-ந் தேதி கூட்டி, வரும் ஏப்ரல் 8-ந் தேதி வரை நடத்தலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிப்ரவரி 1-ந் தேதி பொது பட்ஜெட்டைத் தாக்கல் செய்யப்பட உள்ளது. முதல்கட்டக் கூட்டத்தொடர் ஜனவரி 29-ந் தேதி தொடங்கி பிப்ரவரி 15-ந் தேதி வரையிலும், 2-வது கட்டக் கூட்டத்தொடர் மார்ச் 8-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ந் தேதி வரை நடத்தப்படும் எனத் தெரிவிக்கபக்பட்டுள்ளது.

வரும் 29-ந் தேதி நாடாளுமன்றக் கூட்டுக்குழுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றி, கூட்டத்தொடரைத் தொடங்கி வைக்க உள்ளார். மாநிலங்களவை காலையில் தொடங்கி நண்பகலில் முடிவு பெறும். பிற்பகலில் மக்களவை தொடங்கி இரவுவரை நடத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அனைத்து கட்சி கூட்டம்

இந்நிலையில் 30-ந் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நிருபர்களிடம் கூறுகையில், ‘வரும் 30-ந் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் முழுவதும் காணொலி மூலமே நடத்தப்படும். எதிர்க்கட்சிகள் ஆலோசனைகள், கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. இன்று காலை 11 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்
பிரதமர் மோடி இன்று மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
2. சுற்றுச்சூழல், உளவியலுக்கு நன்மையளிக்கும் பொம்மைகளை உருவாக்கவேண்டும் - பிரதமர் மோடி பேச்சு
சுற்றுச்சூழல் மற்றும் உளவியலுக்கு நன்மையளிக்கும் பொம்மைகளை உருவாக்க வேண்டும் என ’இந்திய பொம்மை கண்காட்சி 2021’ துவக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
3. நெய்வேலியில் புதிய அனல் மின்நிலையம் அர்ப்பணிப்பு: ரூ.12 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள்; கோவையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
நெய்வேலியில் புதிய அனல் மின்நிலையம் அர்ப்பணிக்கப்பட்டது. மேலும் தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை கோவையில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
4. பிரதமர் மோடி இன்று கோவை வருகை
தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று மாலை கோவை வருகிறார். கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசுகிறார்.
5. பிரதமர் மோடி கோவை வருகை
தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் கமிஷன் தொடங்கி விட்டது