உலக செய்திகள்

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்பு: பிரதமர் மோடி, ராகுல்காந்தி வாழ்த்து + "||" + Joe Biden's inauguration as 46th President of the United States: Congratulations to Prime Minister Modi, Rahul Gandhi

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்பு: பிரதமர் மோடி, ராகுல்காந்தி வாழ்த்து

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்பு: பிரதமர் மோடி, ராகுல்காந்தி வாழ்த்து
அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்ற ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி, ராகுல்காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வாஷிங்டன், 

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக இன்று பதவியேற்றார். 

ஜோ பைடனின் பதவியேற்பு விழாவில் தற்போதை துணை அதிபர் மைக் பென்ஸ், முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ், ஒபாமா ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் 46-வது அதிபராகப் பதவியேற்றுள்ள ஜோ பைடனுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில், “அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதற்கு எனது அன்பான வாழ்த்துக்கள். இந்தியா, அமெரிக்கா உறவை மேலும் வலுப்படுத்த அவருடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளேன்.

இந்தியா-அமெரிக்க கூட்டாண்மை பகிர்வு மதிப்புகளை அடிப்படையாகக் கொண்டது. எங்களிடம் கணிசமான மற்றும் பன்முக இருதரப்பு நிகழ்ச்சி நிரல் உள்ளது, இந்தியா-அமெரிக்க கூட்டாட்சியை இன்னும் அதிக உயரத்திற்கு கொண்டு செல்ல ஜனாதிபதி ஜோ பைடனுடன் இணைந்து பணியாற்ற உறுதிபூண்டுளேன்.

பொதுவான சவால்களை எதிர்கொள்வதிலும், உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை முன்னேற்றுவதிலும் நாங்கள் ஒற்றுமையாகவும், நெகிழ்ச்சியுடனும் நிற்கும்போது, அமெரிக்காவை வழிநடத்துவதில் வெற்றிகரமான காலத்திற்கு எனது வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தனது டுவிட்டரில், “ஜனநாயகத்தின் புதிய அத்தியாயத்தை தொடங்கும் அமெரிக்காவுக்கு வாழ்த்துக்கள். ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் துணைத் ஜனாதிபதி கமலா ஹாரிசுக்கு எனது வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.


Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்கா- மெக்சிகோ எல்லை அருகே சாலை விபத்து: 15- பேர் உயிரிழப்பு
அமெரிக்கா- மெக்சிகோ எல்லை அருகே நடந்த சாலை விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
2. அமெரிக்காவில் 5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது - அதிபர் ஜோ பைடன் தகவல்
அமெரிக்காவில் சாதனை அளவாக இதுவரை 5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
3. ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரிக்கும் ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது; அமெரிக்கா அறிவிப்பு
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் அறிவித்துள்ளது.
4. மியான்மர் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைவிட வேண்டும்; அமெரிக்கா எச்சரிக்கை
மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த 1-ந்தேதி கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.
5. அமெரிக்காவில் குடியுரிமை தேர்வு முறையில் டிரம்ப் நிர்வாகம் கொண்டுவந்த கட்டுப்பாடுகள் ரத்து; ஜனாதிபதி ஜோ பைடன் அறிவிப்பு
அமெரிக்காவில் பணி நிமித்தமாக குடியேறும் வெளிநாட்டவர்கள் அந்த நாட்டு குடியுரிமையை பெறுவதற்காக விண்ணப்பித்து தேர்வு எழுத வேண்டும்.