உலக செய்திகள்

அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் பதவியேற்பு + "||" + Kamala Harris Becomes First Woman Vice President Of US

அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் பதவியேற்பு

அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் பதவியேற்பு
அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதியாக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் பதவியேற்றுக் கொண்டார்.
வாஷிங்டன், 

அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். துணை ஜனாதிபதியாக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் தேர்வானார்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன், துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற கமலா ஹாரிஸ் ஆகியோர் பதவியேற்கும் விழா இன்று நடைபெற்றது. அமெரிக்க பாராளுமன்றத்தில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது.

இந்நிலையில், அமெரிக்க துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு பதவிப்பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்துவைக்கப்பட்டது. இதன் மூலம் அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை ஜனாதிபதி என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார்.

பதவியேற்பின் போது, அமெரிக்க துணை ஜனாதிபதியின் பணியை நான் உண்மையாக நிறைவேற்றுவேன் என்றும், அமெரிக்க அரசமைப்பை பாதுகாக்க தன்னால் முடிந்தவரை சிறப்பாக செயல்படுவேன் என்றும் தன்னுடைய உறுதிமொழி ஏற்பில் கமலா ஹாரிஸ் கூறினார்.

முன்னதாக அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்ட கமலா ஹாரிஸ், மக்களுக்கு சேவை செய்ய தயார் என்று தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. ஈரான் கடற்படை படகுகளை எச்சரிக்கும் வகையில் 30 முறை துப்பாக்கிச்சூடு நடத்திய அமெரிக்க கடற்படை கப்பல்
ஈரான் கடற்படைக்கு சொந்தமான படகுகள் அமெரிக்க கடற்படை கப்பலை இடைமறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2. அமெரிக்காவின் உண்மையான கொரோனா பலி எண்ணிக்கை 9 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் - மூத்த தொற்று நோய் நிபுணர் தகவல்
அமெரிக்காவின் உண்மையான கொரோனா பலி எண்ணிக்கை 9 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று அந்நாட்டின் மூத்த தொற்று நோய் நிபுணர் அந்தோணி பாசி தெரிவித்துள்ளார்.
3. அமெரிக்காவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.
4. கொரோனா தடுப்பூசி: காப்புரிமையில் இருந்து விலக்கு அளிக்க ஜெர்மன் எதிர்ப்பு
காப்புரிமை விலக்கு அளிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் பரிந்துரை ஒட்டுமொத்த தடுப்பூசி உற்பத்தியில் கடும் சிக்கல்களை ஏற்படுத்தும் என ஜெர்மன் கூறியுள்ளது.
5. அமெரிக்கா செல்லும் ரஜினி?
ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.