தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டில் நேரடி விசாரணை எப்போது? : 25-ந் தேதிக்குள் முடிவு எடுக்கப்படுகிறது + "||" + When is the direct hearing in the Supreme Court? : Decision taken by 25th

சுப்ரீம் கோர்ட்டில் நேரடி விசாரணை எப்போது? : 25-ந் தேதிக்குள் முடிவு எடுக்கப்படுகிறது

சுப்ரீம் கோர்ட்டில் நேரடி விசாரணை எப்போது? : 25-ந் தேதிக்குள் முடிவு எடுக்கப்படுகிறது
சுப்ரீம் கோர்ட்டில் நேரடி விசாரணை எப்போது என்பது குறித்து வரும் 25-ந் தேதிக்குள் முடிவு எடுக்கப்படுகிறது.
புதுடெல்லி, 

கொரோனா காரணமாக சுப்ரீம் கோர்ட்டில் தற்போது ஆன்லைன் வாயிலாக வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது.

மராட்டிய மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இடஒதுக்கீடுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன் நேற்று நடைபெற்றது.

மராட்டிய அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி, ஆன்லைன் விசாரணையில் சிக்கல் உள்ளது. நேரடி விசாரணையை தொடங்க வேண்டும் என வாதிட்டார்.

அப்போது நீதிபதி அசோக் பூஷண், சுப்ரீம் கோர்ட்டு நேரடி விசாரணையை மீண்டும் தொடங்குவது குறித்து ஜனவரி 25-ந் தேதிக்குள் முடிவு எடுக்கப்படும். மராத்தா இடஒதுக்கீடுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை பிப்ரவரி 5-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம் என்று தெரிவித்தார்.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. தொகுதிக்கு வெளியே வசிப்பவர்களுக்கு தபால் ஓட்டு தேர்தல் ஆணையம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தொகுதிக்கு வெளியே வசிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் உள்ளிட்டோருக்கு தபால் வாக்குரிமை அளிக்க கோரி கேரளத்தை சேர்ந்த எஸ்.சத்யன், சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
2. சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான சதி வழக்கு முடித்து வைப்பு
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் இருந்தபோது, சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்றிய பெண் ஒருவர் அவருக்கு எதிராக கடந்த 2019-ம் ஆண்டு பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.
3. 69 சதவீத இடஒதுக்கீடு விவகாரம்: ‘வேலைவாய்ப்பு, கல்வி நிறுவன சேர்க்கைக்கு இடஒதுக்கீடு அளிப்பது மாநில அரசின் உரிமை’- சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்
மாநில அரசு வேலைவாய்ப்பு, கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கு இடஒதுக்கீடு அளிப்பது என்பது மாநில அரசின் உரிமை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
4. நீலகிரி காட்டு யானை கொல்லப்பட்ட சம்பவம் விலங்கு வதை சட்டத்தில் திருத்தம் கோரிய மனு தள்ளுபடி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
நீலகிரி காட்டு யானை கொல்லப்பட்டதை போன்ற சம்பவங்களைத் தடுக்க விலங்கு வதை சட்டத்தில் திருத்தம் கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க மறுத்துவிட்டது.
5. நிலமுறைகேடு வழக்கில் எடியூரப்பா மீதான விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
நில முறைகேடு வழக்கில் எடியூரப்பா மீதான விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துவிட்டது.