தேசிய செய்திகள்

பிரதமர் மோடி ஜனவரி 23ம் தேதி மேற்கு வங்காளம், அசாமிற்கு பயணம் + "||" + PM Modi to visit Assam, West Bengal on January 23

பிரதமர் மோடி ஜனவரி 23ம் தேதி மேற்கு வங்காளம், அசாமிற்கு பயணம்

பிரதமர் மோடி ஜனவரி 23ம் தேதி மேற்கு வங்காளம், அசாமிற்கு பயணம்
பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 23ம் தேதி மேற்கு வங்காளம், அசாமிற்கு பயணம் மேற்கொள்கிறார்.
புதுடெல்லி, 

பிரதமர் நரேந்திர மோடி, ஜனவரி 23ம் தேதியன்று அசாம் மற்றும் மேற்கு வங்காள மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அங்கு நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் 125 வது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் கொல்கத்தாவில் நடைபெறும் ‘பராக்ரம் திவாஸ்’ கொண்டாட்டங்களில் உரையாற்றுகிறார். 

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 23 ஆம் தேதி நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் பிறந்த நாளை 'பராக்ரம் திவாஸ்' என்று கொண்டாட இந்திய அரசு முடிவு செய்துள்ளது,

அங்கு நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய ராணுவ படையில் பங்களிப்பு செய்த முக்கிய நபர்களை கவுரவிக்கும் பிரதமர் மோடி, கண்காட்சி ஒன்றையும் துவங்கி வைக்கிறார். இந்திய தேசிய ராணுவ படையை சேர்ந்த சுமார் 26 ஆயிரம் தியாகிகளின் நினைவாக நினைவிடம் எழுப்பவும் ஆலோசனை நடந்து வருகிறது. இதற்காக பிரதமர் மோடி தலைமையில் 85 பேர் கொண்ட உயர்நிலை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் பிரகலாத் படேல் தெரிவித்து உள்ளார். 

மேற்கு வங்காள மாநிலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியை முடித்து கொண்டு பிரதமர் மோடி அசாம் மாநிலத்திற்கு செல்கிறார். அங்கு சிவாசாகர் என்னும் இடத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்கிறார். வரும் ஏப்ரல், மே மாதங்களில் மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளநிலையில், பிரதமர் இந்த சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய புதுச்சேரி நர்ஸ்
கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி, தடுப்பூசி போட்டதே தெரியவில்லை என்று நர்ஸ் நிவேதாவிடம் தெரிவித்தார்.
2. இன்று காலை 11 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்
பிரதமர் மோடி இன்று மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
3. சுற்றுச்சூழல், உளவியலுக்கு நன்மையளிக்கும் பொம்மைகளை உருவாக்கவேண்டும் - பிரதமர் மோடி பேச்சு
சுற்றுச்சூழல் மற்றும் உளவியலுக்கு நன்மையளிக்கும் பொம்மைகளை உருவாக்க வேண்டும் என ’இந்திய பொம்மை கண்காட்சி 2021’ துவக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
4. நெய்வேலியில் புதிய அனல் மின்நிலையம் அர்ப்பணிப்பு: ரூ.12 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள்; கோவையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
நெய்வேலியில் புதிய அனல் மின்நிலையம் அர்ப்பணிக்கப்பட்டது. மேலும் தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை கோவையில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
5. பிரதமர் மோடி இன்று கோவை வருகை
தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று மாலை கோவை வருகிறார். கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசுகிறார்.