உலக செய்திகள்

மெக்சிகோ ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி திருட்டு + "||" + Coronavirus vaccines stolen from public hospital in Mexico

மெக்சிகோ ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி திருட்டு

மெக்சிகோ ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி திருட்டு
மெக்சிகோ ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசிகள் திருடப்பட்டது. மேலும் மற்றொரு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
மெக்சிகோசிட்டி,

கொலைகார கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று மெக்சிகோ. சுமார் 13 கோடி பேரை மக்கள் தொகையாக கொண்ட அந்த நாட்டில், இந்த வைரசுக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் பலியாகி இருக்கிறார்கள்.

அங்கு அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று அந்த நாட்டின் அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் அங்கு மோரேலோஸ் மாகாணத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசிகள் திருட்டு போய் விட்டன. மெக்சிகோவில் கிரிமினல்கள் ஆதிக்கம் செலுத்தி வருவதால், இத்தகைய பொருட்களை பாதுகாக்க ராணுவம் நாடு முழுவதும் அமர்த்தப்பட்டுள்ளது.இந்த திருட்டு பற்றி ராணுவம் கருத்து தெரிவிக்கையில், இந்த திருட்டு ஆஸ்பத்திரியின் தடுப்பூசி குழுவின் உறுப்பினரால் சுய நலத்துக்காக நேர்மையற்ற விதத்தில் நடத்தப்பட்டு இருக்கலாம் என கூறி உள்ளது,

அங்குள்ள மற்றொரு மாகாணமான சோனோரோவில் ஒரு ஆஸ்பத்திரிக்குள் ஆயுதங்களுடன் புகுந்த கும்பல், துப்பாக்கிமுனையில் அங்கிருந்த ஊழியரை மிரட்டி ஆக்சிஜன் சிலிண்டர்களை கொள்ளையடித்து விட்டு தப்பியது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வெழுதாமலேயே அனைவரும் பாஸ் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் இயங்காத நிலையில், 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக தமிழக முதல்வர் பழனிசாமி சட்டசபையில் இன்று அறிவித்துள்ளார்.
2. தமிழகத்தில் ஒரே நாளில் 14,043 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 14,043 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
3. அரக்கோணம், தேசிய பேரிடர் மீட்பு படையினர் 20 பேருக்கு கொரோனா தடுப்பூசி
தேசிய பேரிடர் மீட்பு படையினர் 20 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது
4. அபுதாபியின் மஸ்தார் சிட்டி பகுதியில் புதிய கொரோனா தடுப்பூசி மையம்
அபுதாபியின் மஸ்தார் சிட்டி பகுதியில், புதிய கொரோனா தடுப்பூசி மையம் நேற்று திறக்கப்பட்டது.
5. மார்ச் 1 முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி- மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
மார்ச் 1 முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவசகொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல் தெரிவித்து உள்ளார்.