மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார், ராகுல்காந்தி + "||" + Rahul Gandhi starts his election campaign in Tamil Nadu today

தமிழகத்தில் இன்று தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார், ராகுல்காந்தி

தமிழகத்தில் இன்று தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார், ராகுல்காந்தி
தமிழகத்தில் இன்று ராகுல்காந்தி தனது தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளார்.
கோவை,

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளது. இதையடுத்து தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. 

இதனைத்தொடர்ந்து தமிழக அரசியல் களம் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் பரப்புரை மேற்கொள்வதற்காக அக்கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகிறார். 

“ராகுலின் தமிழ் வணக்கம்” என பெயரிடப்பட்டிருக்கும் இந்த சுற்றுப்பயணத்தின்போது, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ராகுல் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். இதற்காக இன்று காலை 8.15 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படும் ராகுல் காந்தி, நண்பகல் 11 மணி அளவில் கோவை வந்தடைகிறார். 

முன்னதாக இதுதொடர்பாக திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி சனிக்கிழமை மாலை திருப்பூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக அன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வரும் அவர் கோவையில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். பின்னர் மதிய உணவை முடித்துக் கொண்டு கார் மூலமாக திருப்பூர் வருகிறார். திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அவினாசி ரோடு அனுப்பர்பாளையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பின்னர் மாலை 3 மணிக்கு அனுப்பர்பாளையம்புதூரில் உள்ள தனியார் பல்பொருள் அங்காடி முன்பு திறந்த வேனில் நின்றபடி ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம் செய்கிறார். இதையடுத்து மாலை 4 மணிக்கு திருப்பூர் ரெயில்நிலையம் அருகில் உள்ள திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் ராகுல்காந்தி, அதே இடத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளார். இதன் பின்பு மாலை 4.30 மணிக்கு பல்லடம் ரோடு ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்களுடன் ராகுல்காந்தி கலந்துரையாடுகிறார்.

இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் அன்று இரவு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் ராகுல்காந்தி தங்குகிறார். திருப்பூரில் ராகுல்காந்தி கலந்து கொள்ளும் தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசு, செல்லக்குமார் எம்.பி. உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். ராகுல்காந்தியை வரவேற்க கட்சியின் மாவட்ட, மாநகர, வட்டார, சர்க்கிள், மண்டல, வார்டு, கிளை நிர்வாகிகள் அணி திரண்டு வருவதுடன், அவருடைய பிரசார நிகழ்ச்சியில் தொழில்துறையினர், தொழிலாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. 

ராகுல்காந்தி வருகையையொட்டி திருப்பூர் மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. இதேபோல் அவரை வரவேற்கும் விதமாக காங்கிரஸ் கட்சி சார்பில் 2500 கொடிகள், வரவேற்பு பதாகை மற்றும் தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் ஒரே நாளில் 14,043 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 14,043 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
2. தமிழகத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது - சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டி உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
3. தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
4. "தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது" - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
5. தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
வளிமண்டலத்தின் மேலடுக்கில் நிலவும் சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.