மாநில செய்திகள்

காட்டு யானை மீது தீப்பந்தம் வீச்சு: கைதான 2 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க பரிந்துரை + "||" + Fire on wild elephant: Recommended to jail 2 arrested in thuggery law

காட்டு யானை மீது தீப்பந்தம் வீச்சு: கைதான 2 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க பரிந்துரை

காட்டு யானை மீது தீப்பந்தம் வீச்சு: கைதான 2 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க பரிந்துரை
காட்டு யானை மீது தீப்பந்தம் வீசிய வழக்கில் கைதான 2 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டரிடம் பரிந்துரை செய்துள்ளதாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல் தெரிவித்துள்ளார்.
கூடலூர்,

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் (வெளி மண்டலம்) மசினகுடி பகுதியில் ஆண் காட்டு யானை படுகாயங்களுடன் சுற்றி வந்தது. மேலும் வனப்பகுதிக்கு செல்லாமல் ஊருக்குள் முகாமிட்டு வந்தது. இதையடுத்து காட்டு யானை கண்காணித்து வனத்துறையினர் சிகிச்சை அளிதது வந்தனர். இந்த சமயத்தில் காட்டு யானையின் இடது பக்க காதில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.

இதனால் கடந்த 19-ந் தேதி யானையை பிடித்து முதுமலைக்கு கொண்டு சென்று பராமரிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். தொடர்ந்து கும்கி யானைகள் உதவியுடன் காட்டு யானையை வனத்துறையினர் பிடித்து லாரியில் ஏற்றிக்கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது. பின்னர் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்து அடர்ந்த வனத்தில் புதைத்தனர்.

இந்த நிலையில் மசினகுடி அருகே மாவனல்லா பகுதியில் ஒரு தனியார் விடுதி கட்டிடத்தின் அருகே காட்டு யானை நிற்கும்போது அதன் மீது தீப்பந்தத்தை சிலர் வீசும் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. இக்காட்சியைக் கண்ட பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது.

இதுகுறித்து டின்னர் சிங்காரா வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து மசினகுடி மாவனல்லா பகுதியைச் சேர்ந்த தனியார் தங்கும் விடுதி உரிமையாளர் மகன் ரேமண்ட் டீன் (வயது 28), பிரசாத் (36) ஆகிய 2 பேரை கைது செய்தனர். தொடர்ந்து தங்கும் விடுதி உரிமையாளர் ரிக்கி ராயனை வனத்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் தனியார் தங்கும் விடுதியை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதில் காட்டு யானை மீது தீப்பந்தம் வீசியது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக வனத்துறையினரிடம் ரேமண்ட் டீன், பிரசாத் ஆகியோர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

சம்பவத்தன்று நள்ளிரவு 12.30 மணிக்கு வீட்டின் பின்பக்கம் உடைக்கும் சத்தம் கேட்டது. இதனால் தூக்கத்தில் இருந்து எழுந்து வந்து பார்த்த போது கட்டிடத்தின் அருகே காட்டுயானை வந்து நின்றிருந்தது. இதனால் டார்ச் லைட் அடித்து வெளிச்சம் ஏற்படுத்தினோம். இருப்பினும் காட்டு யானை அங்கிருந்து செல்லவில்லை. இதனால் யானையை விரட்டுவதற்காக தீப்பந்தம் ஏற்றி விரட்டும் பணியில் ஈடுபட்டோம். அப்போது தீப்பந்தம் யானை மீது விழுந்துவிட்டது. இதனால் வலி தாங்க முடியாமல் அங்கிருந்து ஓடியது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர் 2 பேரையும் கூடலூர் நீதிமன்றத்தில் வனத்துறையினர் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து அடுத்த மாதம் 5-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி பாபு உத்தரவிட்டார். இதனால் குன்னூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல் ஊட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காட்டு யானைக்கு தீ வைத்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள ரிக்கி ராயனை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல் காட்டு யானைக்கு தீ வைக்கும் வீடியோ காட்சியை முழுமையாக ஆராய்ந்து மேலும் சிலரை கைது செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக மசினகுடியில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் தனியார் தங்கும் விடுதிகள் குறித்து ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. காவலாளி வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை
காவலாளி வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை சேதப்படுத்தியது
2. மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் உலா வந்த காட்டு யானை
மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் காட்டு யானை உலா வந்தது.
3. காட்டு யானை டீக்கடையை உடைத்து அட்டகாசம்
மளுக்கப்பாறை எஸ்டேட்டில் காட்டு யானை டீக்கடையை உடைத்து அட்டகாசம் செய்தது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்
4. காட்டு யானையை பிடிக்க முடியாமல் திணறுவது ஏன்?வனத்துறையினர் விளக்கம்
காட்டு யானையை பிடிக்க முடியாமல் திணறுவது ஏன்?
5. மசினகுடி அருகே ஊருக்குள் முகாமிட்ட காட்டு யானைக்கு பழங்கள் கொடுத்து அழைத்து சென்ற வனத்துறையினர்
மசினகுடி அருகே ஊருக்குள் முகாமிட்ட காட்டு யானைக்கு பழங்கள் கொடுத்து வனத்துறையினர் அழைத்து சென்றனர்.