தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் இன்று 2 ஆயிரத்து 752 பேருக்கு கொரோனா - 45 பேர் பலி + "||" + Maharashtra Coronavirus Cases Updates

மகாராஷ்டிராவில் இன்று 2 ஆயிரத்து 752 பேருக்கு கொரோனா - 45 பேர் பலி

மகாராஷ்டிராவில் இன்று 2 ஆயிரத்து 752 பேருக்கு கொரோனா - 45 பேர் பலி
மகாராஷ்டிராவில் இன்று 2 ஆயிரத்து 752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மும்பை:

இந்தியாவில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

ஆனால், தொடக்கத்தில் தினமும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அம்மாநிலத்தில் கொரோனா தொற்று பரவும் வேகம் பெருமளவு குறைந்து வருகிறது. 

இந்நிலையில், மகாராஷ்டிராவின் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

அந்த தகவலின்படி, மாநிலத்தில் இன்று 2 ஆயிரத்து 752 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்து 9 ஆயிரத்து 106 ஆக அதிகரித்துள்ளது. 

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 50 ஆயிரத்து 785 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 1 ஆயிரத்து 743 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 12 ஆயிரத்து 264 ஆக அதிகரித்துள்ளது. 

ஆனாலும், மாநிலத்தில் வைரஸ் தாக்குதலுக்கு இன்று 45 பேர் உயிரிழந்தனர். இதனால் மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 785 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11. 49- கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11 கோடியே 49- லட்சமாக உயர்ந்துள்ளது.
2. பிரிட்டனில் மேலும் 5,455- பேருக்கு கொரோனா தொற்று
பிரிட்டனில் மேலும் 5,455- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கொரோனா பரவலை தடுக்க நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்தில் மீண்டும் ஊரடங்கு
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்தில் 7 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
4. 3 மாநிலங்களில் இரண்டு புதியவகை கொரோனா: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
இரண்டு புதிய வகை கொரோனா தெலுங்கானா, மராட்டியத்தில் கண்டறியப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
5. கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் : உத்தவ் தாக்கரே
கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை