மாநில செய்திகள்

ஜெயலலிதாவின் நினைவு இல்லமான வேதா நிலையம்: வரும் 28 ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைக்கிறார் + "||" + Vedha Nilayam, Jayalalithaa's memorial house: Chief Minister Palanisamy will open it on the 28th

ஜெயலலிதாவின் நினைவு இல்லமான வேதா நிலையம்: வரும் 28 ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைக்கிறார்

ஜெயலலிதாவின் நினைவு இல்லமான வேதா நிலையம்: வரும் 28 ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைக்கிறார்
ஜெயலலிதாவின் நினைவு இல்லமான வேதா நிலையத்தை வரும் 28 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.
சென்னை,

சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தில் வசித்து வந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு அறிவித்தார்.

சட்டசபையிலும் இதற்காக மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, ஜெயலலிதா வசித்த இல்லத்தை நினைவிடமாக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. அதன் அடிப்படையில் போயஸ் தோட்டம் அமைந்திருக்கும் நிலத்தை கையகப்படுத்தி அதற்கான இழப்பீடாக ரூ.68 கோடி நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த தொகையையும் அரசு கோர்ட்டில் செலுத்தியது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றமும், நினைவில்லம் அமைக்க அனுமதி வழங்கியது. இதனையடுத்து நினைவில்லமாக மாற்றி அதை பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விட தமிழக அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்நிலையில்,  சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை வருகிற 28-ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். ஜனவரி 28 ஆம் தேதி காலை நடைபெறும் திறப்பு விழாவிற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார்.

முன்னதாக வேதா இல்லத்தில் ஜெயலலிதா படித்த புத்தங்கள், பயன்படுத்திய பொருட்கள் காட்சிக்கு இடம்பெறும் என்றும், நினைவு இல்லம் திறக்கப்பட்ட பின்னர் பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  


தொடர்புடைய செய்திகள்

1. ஜெயலலிதா பிறந்தநாளில் தி.மு.க.வை தலையெடுக்கவிடாமல் உறுதிமொழி ஏற்போம் தொண்டர்களுக்கு, டி.டி.வி.தினகரன் அழைப்பு
தி.மு.க.வை தலையெடுக்கவிடாமல் செய்து, புதிய விடியலை ஏற்படுத்திட உறுதி ஏற்றிடுவோம் என்று தொண்டர்களை டி.டி.வி.தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
2. இன்று 73-வது பிறந்தநாள்: ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவிக்கிறார்கள் விருப்பமனு வினியோகத்தையும் தொடங்கி வைக்கிறார்கள்
ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள். அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
3. ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி தமிழகத்தில் 4 நாட்கள் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகத்தில் 4 நாட்கள் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. சென்னை ஆர்.கே.நகரில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், போடிநாயக்கனூரில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பேசுகிறார்கள்.
4. ஜெயலலிதா நினைவு இல்லத்தை பொதுமக்கள் பார்வையிட விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு; ஐகோர்ட்டு உத்தரவு
ஜெயலலிதா நினைவு இல்லத்தை பார்வையிட பொதுமக்களை அனுமதிக்கக்கூடாது என்ற தடை உத்தரவை நீட்டித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5. ஜெயலலிதா நினைவிடத்தில் அருங்காட்சியக கட்டுமானப்பணிகள் தீவிரம் பிறந்த நாளான 24-ந் தேதி திறக்க திட்டம்
சென்னையில் ஜெயலலிதா நினைவிடம் அருகில் ஜெயலலிதாவின் 6 அடி உயர மெழுகு சிலையுடன் கூடிய அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவை வருகிற 24-ந் தேதி அவருடைய பிறந்த நாளில் திறக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.