தேசிய செய்திகள்

டிராக்டர் பேரணியின்போது விதிகளை மீறியதாக விவசாய தலைவர்கள் மீது வழக்குபதிவு + "||" + Prosecution of agricultural leaders for violating rules during tractor rally

டிராக்டர் பேரணியின்போது விதிகளை மீறியதாக விவசாய தலைவர்கள் மீது வழக்குபதிவு

டிராக்டர் பேரணியின்போது விதிகளை மீறியதாக விவசாய தலைவர்கள் மீது வழக்குபதிவு
டெல்லி டிராக்டர் பேரணியின்போது விதிகளை மீறியதாக விவசாய சங்கத்தின் முக்கிய தலைவர்கள் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுடெல்லி,

வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து டெல்லியில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் நேற்று நடத்திய டிராக்டர் பேரணியில் மோதல் வெடித்தது. போராட்டக்காரர்களை தடியடி நடத்தியும், கண்ணீர்புகை குண்டுகளை பயன்படுத்தியும் போலீசார் விரட்டியடித்தனர்.

இதனால் தலைநகரில் பதற்றமான சூழல் உருவானது. டெல்லியில் நேற்று நடந்த வன்முறை சம்பவங்களில் 83 போலீசார் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் நேற்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 22 முதல் தகவல் அறிக்கையை டெல்லி போலீசார் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த டிராக்டர் பேரணியின்போது விதிகளை மீறியதாக விவசாய சங்கத்தின் முக்கிய தலைவர்கள் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 5 முதல்தகவல் அறிக்கை கிழக்கு மண்டலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று நடந்த மோதலில் உயிரிழந்த விவசாயி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக பஞ்சாப் நடிகர் தீப் சித்து கைது
டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக பஞ்சாப் நடிகர் தீப் சித்துவை டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவினர் கைது செய்தனர்.
2. டிராக்டர் பேரணியில் உயிரிழந்த விவசாயியின் குடும்பத்தினரை சந்தித்த பிரியங்கா காந்தி
டெல்லி டிராக்டர் பேரணியில் உயிரிழந்த விவசாயியின் குடும்பத்தினரை பிரியங்கா காந்தி சந்தித்தார்
3. டிராக்டர் பேரணி: டெல்லி செங்கோட்டையில் ஏறி விவசாயிகள் போராட்டம் - பதற்றம்
டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்திவரும் விவசாயிகள் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர்
4. சேலத்தில் டிராக்டர் பேரணி நடத்த அனுமதி மறுப்பு
டிராக்டர் பேரணி நடத்த அனுமதி மறுப்பு
5. டிராக்டர் பேரணி தொடர்பான 2-ம் நாள் பேச்சுவார்த்தையிலும் இழுபறி: டெல்லி நகருக்குள் நடத்துவதில் விவசாயிகள் உறுதி
டிராக்டர் பேரணியை டெல்லி நகருக்குள் நடத்துவதில் விவசாய அமைப்புகள் உறுதியாக இருப்பதால், 2-வது நாள் பேச்சுவார்த்தையிலும் இழுபறி ஏற்பட்டுள்ளது.