தேசிய செய்திகள்

நிலமுறைகேடு வழக்கில் எடியூரப்பா மீதான விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு + "||" + Supreme Court refuses to stay trial on Yediyurappa

நிலமுறைகேடு வழக்கில் எடியூரப்பா மீதான விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

நிலமுறைகேடு வழக்கில் எடியூரப்பா மீதான விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
நில முறைகேடு வழக்கில் எடியூரப்பா மீதான விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துவிட்டது.
பெங்களூரு:


எடியூரப்பா முன்பு முதல்-மந்திரியாக இருந்தபோது, கடந்த 2010-ம் ஆண்டு தொழில் அதிபர் ஆலம்பாஷா என்பவருக்கு, குடியிருப்பு கட்டும் திட்டத்திற்காக தேவனஹள்ளி தொழிற்பேட்டையில் 26 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அதன் பிறகு அந்த நிலம் ஒதுக்கீடு உத்தரவு கடந்த 2011-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது.

 அந்த நிலத்தை எடியூரப்பா, முருகேஷ் நிரானி ஆகியோர் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. மேலும் ஆலம்பாஷா லோக்ஆயுக்தா கோர்ட்டில் எடியூரப்பா, முருகேஷ் நிரானிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அதன்படி எடியூரப்பாவுக்கு எதிராக விசாரணை நடைபெற்று வந்தது.

எடியூரப்பா மீதான இந்த வழக்கு கடந்த 2016-ம் ஆண்டு பெங்களூரு செசன்சு கோர்ட்டால் ரத்து செய்யப்பட்டது. அதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் ஆலம்பாஷா மேல்முறையீடு செய்தார். அதில், எடியூரப்பா, முருகேஷ் நிரானி ஆகியோருக்கு எதிரான இந்த நில முறைகேடு வழக்கை விசாரணை நடத்த நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா உத்தரவிட்டார்.

சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

கர்நாடக ஐகோர்ட்டில் இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முதல்-மந்திரி எடியூரப்பா, கனிம சுரங்கத்துறை மந்திரி முருகேஷ் நிரானி ஆகியோர் மேல்முறையீடு செய்தனர். தங்கள் மீதான இந்த நில முறைகேடு வழக்கை ரத்து செய்யுமாறு கோரினர். அவர்களின் இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. 

அப்போது, எடியூரப்பா, முருகேஷ் நிரானிக்கு எதிராக விசாரணை நடத்துவதற்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். அதே வேளையில் இந்த வழக்கில் எடியூரப்பா மற்றும் முருகேஷ் நிரானி ஆகியோரை கைது செய்யவும் நீதிபதிகள் தடை விதித்து உத்தரவிட்டனர். இதனால் எடியூரப்பா மற்றும் மந்திரி முருகேஷ் நிரானி ஆகியோர் நில முறைகேடு விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்குகளை விசாரிக்க 2 சிறப்பு நீதிபதிகள் நியமனம்; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் நிலுவை வழக்குகளை விசாரிக்க இரு சிறப்பு நீதிபதிகளை நியமித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2. நீலகிரி கலெக்டரை மாற்ற அனுமதி கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவை மாற்ற அனுமதி கோரிய தமிழக அரசின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
3. விஞ்ஞானி நம்பி நாராயணன் கைது: சுப்ரீம் கோர்ட்டு விசாரணை குழு அறிக்கை சமர்ப்பிப்பு
திரவ எரிபொருளைப் பயன்படுத்தி ராக்கெட்டை வடிவமைத்த குழுவில் இடம்பெற்ற இஸ்ரோவின் விஞ்ஞானி நம்பி நாராயணன், பணத்துக்காக ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக 1994-ல் கைது செய்யப்பட்டார்.
4. மூன்று கோடி ரேஷன் கார்டுகளை மத்திய அரசு ரத்து செய்துள்ளது மிகவும் தீவிரமான விஷயம் -சுப்ரீம் கோர்ட்
பழங்குடியினர் மற்றும் ஏழைகள் உள்பட மூன்று கோடி ரேஷன் கார்டுகளை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. அது மிகவும் தீவிரமான விஷயம் என்று சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.
5. ஆயுர்வேத டாக்டர்களை ஆபரேஷன் செய்ய அனுமதிப்பதற்கு எதிரான வழக்கு; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
இந்திய மருத்துவர் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.