தேசிய செய்திகள்

கங்குலி உடல் நிலை சீராக உள்ளது: மருத்துவமனை விளக்கம் + "||" + Sourav Ganguly 'absolutely stable', doctors to take call on placing 2nd stent Wednesday evening

கங்குலி உடல் நிலை சீராக உள்ளது: மருத்துவமனை விளக்கம்

கங்குலி உடல் நிலை சீராக உள்ளது: மருத்துவமனை விளக்கம்
பிசிசிஐ தலைவர் கங்குலி உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
கொல்கத்தா,

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு கடந்த 2-ந்தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாயில் 3 அடைப்பு இருப்பது தெரியவந்தது. ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையின் மூலம் ஒரு அடைப்பு அகற்றப்பட்டது. 

5 நாள் சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார். இந்த நிலையில் கங்குலியை நேற்று மீண்டும் அவசரமாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு உண்டானது. அவருக்கு மறுபடியும் லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதாக தகவல்கள் பரவின. ஆனால் அவர் தனது இதயம் செயல்பாடு தொடர்பாக பரிசோதித்துக் கொள்ள வந்ததாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் ஆஸ்பத்திரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 188 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா
ஐதரபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 187- ரன்களை குவித்தது.
2. ஐ.பி.எல். கிரிக்கெட்: கோலோச்சும் முனைப்பில் கொல்கத்தா
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது.
3. பாஜக எம்.பி, பிரக்யா சிங் தாகூர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
பாஜக எம்.பி பிரக்யா சிங் தாகூர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
4. சசிகலா இன்று டிஸ்சார்ஜ்: மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.
5. சசிகலா உடல் நிலை சீராக உள்ளது: மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை
சசிகலா உடல் நிலை சீராக உள்ளதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.