உலக செய்திகள்

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ; வீடுகள், மரங்கள் எரிந்து நாசம் + "||" + Wildfires in Australia; Houses and trees were destroyed by fire

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ; வீடுகள், மரங்கள் எரிந்து நாசம்

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ; வீடுகள், மரங்கள் எரிந்து நாசம்
ஆஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத் தீயில் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமானது.
கான்பெர்ரா,

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரின் வடகிழக்கு பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தீ வேகமாக பரவி வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் வசித்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

தீயை அணைக்க 250-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. காட்டுத் தீயில் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமானதாகவும், மேலும் சேதங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

சுமார் 60 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள 7 ஆயிரம் ஏக்கர் காட்டுப்பகுதி தீயில் எரிந்து நாசமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தீ வேகமாக பரவுதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியா: செரோஜா மற்றும் ஓடெட் ஆகிய 2 சக்தி வாய்ந்த புயல்கள் தாக்கக்கூடும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
ஆஸ்திரேலியாவை செரோஜா மற்றும் ஓடெட் ஆகிய 2 சக்தி வாய்ந்த புயல்கள் தாக்க உள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
2. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் வெளுத்து வாங்கும் கனமழை
ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது.
3. ஆஸ்திரேலியா, ஜப்பான் பிரதமர்களுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், மோடி நாளை ஆலோசனை
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலியா, ஜப்பான் பிரதமர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நாளை நடக்கிறது. கொரோனா, பொருளாதார பிரச்சினைகள் குறித்து அவர்கள் விவாதிக்கிறார்கள்.
4. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 20 ஓவர் தொடரை வென்றது நியூசிலாந்து
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று நடந்தது.
5. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான விண்வெளி கூட்டுறவை விரிவுபடுத்துவதற்கான புதிய ஒப்பந்தம் கையெழுத்து
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான விண்வெளி கூட்டுறவை விரிவுபடுத்துவதற்கான புதிய ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.