தேசிய செய்திகள்

டிராக்டர் பேரணியில் உயிரிழந்த விவசாயியின் குடும்பத்தினரை சந்தித்த பிரியங்கா காந்தி + "||" + "He Was 25, My Son 20": Priyanka Gandhi Meets Family Of Farmer Who Died

டிராக்டர் பேரணியில் உயிரிழந்த விவசாயியின் குடும்பத்தினரை சந்தித்த பிரியங்கா காந்தி

டிராக்டர் பேரணியில் உயிரிழந்த விவசாயியின் குடும்பத்தினரை சந்தித்த பிரியங்கா காந்தி
டெல்லி டிராக்டர் பேரணியில் உயிரிழந்த விவசாயியின் குடும்பத்தினரை பிரியங்கா காந்தி சந்தித்தார்
ராம்பூர், 

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தில் விவசாயிகள் சார்பில், டெல்லியில் நடந்த டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது. கட்டுப்பாடுகளை மீறி நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியை போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் தடுக்க முயன்றனர்.

போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. அப்போது மத்திய டெல்லியின் மிண்டோ சாலையில் ஒரு டிராக்டர் நிலை தடுமாறி கவிழ்ந்ததில் விவசாயி ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்தது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல், அவரது சொந்த ஊருக்கு கொண்டுசெல்லப்பட்டது. உயிரிழந்த நபர் உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் அருகே உள்ள டிப்டிபா கிராமத்தை சேர்ந்த 27 வயதான நவ்ரீத் சிங் என்று கண்டறியப்பட்டது. 

இந்த நிலையில் நவ்ரீத் சிங்கின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, நேற்று அவர்களது வீட்டிற்கு சென்றார். மாநில காங்கிரஸ் தலைவர் அஜய்குமார் லல்லு மற்றும் முக்கிய காங்கிரஸ் பிரமுகர்களும் அவருடன் சென்றனர். அவர்கள் நவ்ரீத் சிங்கின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன், அவருக்கு அஞ்சலியும் செலுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

1. பெரியபாளையம் அருகே விவசாயி வீட்டில் நகை திருடிய தாய்-மகள் கைது
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கொசவன்பேட்டை ஊராட்சியில் உள்ள காமாட்சி நகரில் வசித்து வருபவர் குப்பன்.
2. டெல்லியில் 118-வது நாளாக விவசாயிகள் போராட்டம்; 3 மாநிலங்களில் சுங்க கட்டண இழப்பு ரூ.815 கோடி
டெல்லியில் விவசாயிகள் 118-வது நாளாக போராட்டம் நடத்தி வருவதால் 3 மூன்று மாநிலங்களில் ரூ.815 கோடி சுங்க கட்டண இழப்பு ஏற்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
3. பிப்ரவரி 18-ந் தேதி வரை டெல்லி போராட்டக்களங்களில் 68 விவசாயிகள் சாவு; அரியானா மந்திரி தகவல்
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் கடந்த நவம்பர் மாத இறுதியில் இருந்து விவசாயிகள் போராடி வருகின்றனர். இதில் அவ்வப்போது பல்வேறு காரணங்களால் உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றன.
4. டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து மேலும் ஒரு விவசாயி தற்கொலை போராட்டக்களம் அருகே தூக்கில் தொங்கினார்
டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டக்களம் அருகே மேலும் ஒரு விவசாயி தற்கொலை தூக்கில் தொங்கினார்.
5. வேளாண் சட்டங்களால் அதிருப்தி பஞ்சாபில் மகனுடன் விவசாயி தற்கொலை
மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப்பெறாததால் மன உளைச்சலில் பஞ்சாபில் மகனுடன் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.