தேசிய செய்திகள்

குஜராத், அசாமில் மார்ச் 1-ம் தேதி மாநிலங்களவை இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு + "||" + EC says Rajya Sabha bypolls in Gujarat, Assam to be held on March 1

குஜராத், அசாமில் மார்ச் 1-ம் தேதி மாநிலங்களவை இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

குஜராத், அசாமில் மார்ச் 1-ம் தேதி மாநிலங்களவை இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
குஜராத், அசாமில் காலியாக உள்ள 3 மேல்சபை இடங்களுக்கு இடைத்தேர்தல் மார்ச் 1-ந்தேதி நடத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி, 

குஜராத்தில், அகமத் படேல் (காங்கிரஸ் மூத்த தலைவர்) நவம்பர் 25-ந்தேதியும் மற்றும் அபய் பரத்வாஜ் (பா.ஜ.க.) டிசம்பர் 1-ந்தேதியும் மரணமடைந்தனர். அவர்களது பதவி வரிசை முறையே 2023 மற்றும் 2026 வரை இருந்ததால் அவர்கள் இறப்பிற்கு பின்பு அந்த இரு தொகுதிகள் காலியிடமாகின.

இதேபோல அசாமில் போடோ மக்கள் முன்னணி எம்.பி. பிஸ்வாஜித் டைமாரி தனது பதவியை நவம்பர் இறுதியில் ராஜினாமா செய்தார். அவரது பதவி 2026 வரை இருந்தது. எனவே இந்த தொகுதியும் காலியானது. காலியான 3 மேல்சபை எம்.பி. பதவிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வரும் 11-ந்தேதி வெளியிடப்பட உள்ளது. தேர்தல் மார்ச் 1-ந்தேதி நடத்தப்பட இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. வாக்குப்பதிவு நடந்து முடிந்ததும் அன்றே வாக்கு எண்ணிக்கையும் நடக்க இருக்கிறது. தேர்தல் நடைமுறை விதிகளின்படி, தேர்தல் நடைபெறும் நாளிலேயே மாநிலங்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானில் இருந்து படகில் கடத்தி வரப்பட்ட ரூ.150 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - 8 பேர் கைது
பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 150 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை குஜராத் போலீசார் கைப்பற்றினர்.
2. குஜராத்தில் இன்று 7 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
குஜராத் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,67,616 ஆக அதிகரித்துள்ளது.
3. குஜராத்தில் இன்று 5,469 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
குஜராத்தில் இன்று 5,469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கேரளா, அசாம், மேற்கு வங்காளத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது
கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மூன்று மாநிலங்களில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
5. ‘வளர்ச்சிக்கான செயல்திட்டம், காங்கிரசிடம் இல்லை’; அசாமில் அமித்ஷா இறுதிக்கட்ட பிரசாரம்
வளர்ச்சிக்கான செயல்திட்டம் காங்கிரசிடம் இல்லை என்று அசாமில் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் செய்த அமித்ஷா குறிப்பிட்டார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை