மாநில செய்திகள்

அதிமுகதான் பாஜகவின் 'பி' டீம் - திமுக எம்.பி. கனிமொழி விமர்சனம் + "||" + AIADMK is BJP's 'B' team - DMK MP Kanimozhi Review

அதிமுகதான் பாஜகவின் 'பி' டீம் - திமுக எம்.பி. கனிமொழி விமர்சனம்

அதிமுகதான் பாஜகவின் 'பி' டீம் - திமுக எம்.பி. கனிமொழி விமர்சனம்
அதிமுகதான் பாஜகவின் 'பி' டீம் என்று திமுக எம்.பி. கனிமொழி விமர்சனம் செய்துள்ளார்.
மதுரை,

திமுகவின் 'பி' டீமாக ச‌சிகலா செயல்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த கருத்துக்கு திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி பதில் அளித்துள்ளார். 

இதுதொடர்பாக மதுரையில் கனிமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “திமுகவிற்கு எந்த பி டீமும் தேவையில்லை. அதிமுகதான் பாஜகவின் பி டீமாக செயல்பட்டு வருகிறது. உடல்நலம் குறைவான அம்மையாரை அதிமுகவினர் தரக்குறைவாக விமர்சனம் செய்து வருகிறார்கள். வரும் தேர்தலில் திமுக வெற்றி பெறும். தளபதி முதல்வராவார். அதிமுக செய்யாதவற்றை செய்ததாக சொல்லி ஓட்டு கேட்கின்றனர்? திமுக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் செய்த திட்டங்களை முன்னிறுத்தி வாக்கு கேட்கிறோம். திமுகவில் இருக்கக்கூடிய கூட்டணிகள் தொடரும். அப்படி ஏதாவது மாற்றங்கள் இருந்தால் திமுக தலைமை முடிவு எடுக்கும். பிஜேபியுடன் கூட்டணியில் இருப்பது தவறு என்று அதிமுக எண்ணுகிறது.

அழகிரி குறித்து கருணாநிதி எடுத்த நிலைப்பாடுதான். தற்போது முடிவெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், மு.க.அழகிரி குறித்து ஸ்டாலின் முடிவு எடுப்பார்.

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில் கூட்டுறவு வங்கி கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளது. அதிமுகவின் அனைத்து அறிக்கைகளும் வெற்று அறிக்கையாகவே இருந்துள்ளது. அதேபோல் வங்கி கடன் தள்ளுபடி அறிக்கையும் வெற்று அறிக்கையாகவே இருக்கும்” என்று கூறினார். 


தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு வங்காள பா.ஜனதா தலைவர் திலீப் கோசுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்
மேற்கு வங்காள பா.ஜனதா தலைவர் திலீப் கோசுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது.
2. தண்ணீர் மற்றும் மோர் பந்தல் அமைத்து மக்கள் தாக்கம் தணிக்க வேண்டும் - தொண்டர்களுக்கு அதிமுக தலைமை வேண்டுகோள்
கொரோனா தொற்று அதிகரிப்பதால் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முககவசம் உள்ளிட்டவற்றையும் அதிமுக தொண்டர்கள் வழங்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.
3. கொரோனா தொற்றிலிருந்து மீண்டார் திமுக எம்.பி. கனிமொழி
மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கனிமொழி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
4. கட்சியை விட தேசம் பெரிது: பாஜக நிறுவன தினத்தில் பிரதமர் மோடி பேச்சு
பாஜக தேசிய நலனை பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமல்லாமல், பிராந்திய நலனிலும் அக்கறைக் கொண்ட கட்சியும் ஆகும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
5. அதிமுக, பாமக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவளித்து தமிழகத்தில் நல்லாட்சி தொடரச் செய்ய வேண்டும் - டாக்டர் ராமதாஸ் அறிக்கை
அதிமுக, பாமக மற்றும் அவற்றின் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவளித்து தமிழகத்தில் நல்லாட்சி தொடரச் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.