உலக செய்திகள்

ஆஸ்திரேலிய கடற்பரப்பில் 7.7 ஆக பதிவான நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு + "||" + 7.7-magnitude earthquake in South Pacific causes tsunami; Australia on alert

ஆஸ்திரேலிய கடற்பரப்பில் 7.7 ஆக பதிவான நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

ஆஸ்திரேலிய கடற்பரப்பில் 7.7 ஆக பதிவான நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு
ஆஸ்திரேலியா கடற்பரப்பில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானது. இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிட்னி, 

ஆஸ்திரேலியா கடற்பரப்பிற்கு அருகே தெற்கு பசிபிக் பகுதியில் இன்று ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து நியூசிலாந்து, வணூட்டு, புதிய கலிடோனியா கடற்கரை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
இந்த பூகம்பத்தால் அபாயகரமான சுனாமி அலைகள் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் உருவாக வாய்ப்புள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

நியூசிலாந்து தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் கடலோரப் பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு விரைவாக செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளது.

7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நியூசிலாந்து கடலோரப் பகுதிகள் கரையில் வலுவான மற்றும் அசாதாரண நீரோட்டங்கள் மற்றும் கணிக்க முடியாத எழுச்சிகளை காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு
அந்தமானில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானது.
2. ஈரானில் 5.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஈரானின் புஷேர் நகரில் ரிக்டர் 5.8 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
3. அருணாசல பிரதேசத்தில் லேசான நில நடுக்கம்
அருணாசல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
4. ஆஸ்திரேலியா: செரோஜா மற்றும் ஓடெட் ஆகிய 2 சக்தி வாய்ந்த புயல்கள் தாக்கக்கூடும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
ஆஸ்திரேலியாவை செரோஜா மற்றும் ஓடெட் ஆகிய 2 சக்தி வாய்ந்த புயல்கள் தாக்க உள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
5. இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.