மாநில செய்திகள்

தமிழக சட்டசபை தேர்தலை நடத்துவது குறித்து தலைமை செயலாளர், டி.ஜி.பி.யுடன் தலைமை தேர்தல் கமிஷனர் ஆலோசனை + "||" + Chief Election Commissioner consults with Chief Secretary, DGP on holding Tamil Nadu Assembly elections

தமிழக சட்டசபை தேர்தலை நடத்துவது குறித்து தலைமை செயலாளர், டி.ஜி.பி.யுடன் தலைமை தேர்தல் கமிஷனர் ஆலோசனை

தமிழக சட்டசபை தேர்தலை நடத்துவது குறித்து தலைமை செயலாளர், டி.ஜி.பி.யுடன் தலைமை தேர்தல் கமிஷனர் ஆலோசனை
தமிழக சட்டசபை தேர்தலை நடத்துவது குறித்து தலைமை செயலாளர், டி.ஜி.பி. மற்றும் உயர் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் கமிஷனர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
சென்னை, 

தமிழக சட்டசபையின் பதவிக்காலம் மே மாதம் முடிவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் சட்டசபை தேர்தலை நடத்துவதற்கான ஆய்வு பணிகளை மேற்கொள்ள இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா தலைமையில் கமிஷனர்கள் மற்றும் அதிகாரிகள் நேற்று முன்தினம் சென்னை வந்தனர்.

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சுனில் அரோரா மற்றும் தேர்தல் கமிஷனர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ்குமார், துணை கமிஷனர் சந்திரபூஷன்குமார், பொதுச்செயலாளர் உமேஷ் சின்ஹா, இயக்குனர் பங்கஜ் ஸ்ரீவஸ்தவா, கூடுதல் இயக்குனர் ஷிபாலி சரண், செயலாளர் மல்லே மாலிக் ஆகியோர் நேற்று முன்தினம் அரசியல் கட்சியினரை சந்தித்து தேர்தல் முன்னேற்பாடுகள் பற்றிய கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை கேட்டறிந்தனர்.

தலைமை செயலாளருடன் ஆலோசனை

இந்தநிலையில் நேற்று தமிழக அரசின் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி மற்றும் பல்வேறு துறைகளின் தலைவர்களுடன் தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் ஆலோசனை நடத்தினர்.

அப்போது, கொரோனாவால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் நலன் பாதிக்கப்படாத வகையில் எவ்வாறு தேர்தலை நடத்துவது?, எந்த தேதியில் தேர்தலை நடத்தினால் சரியாக இருக்கும், தேர்தல் பணிக்காக அதிகாரிகள், பணியாளர்கள் தயார்நிலையில் உள்ளார்களா? என்பது குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

கூடுதல் வாக்குச்சாவடி

கொரோனா வைரஸ் பரவல் குறைந்துள்ள போதிலும் சமூக இடைவெளியை பின்பற்றி தேர்தலை நடத்த வேண்டியது உள்ளதால் ஒரு வாக்குச்சாவடிக்கு ஆயிரம் வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் கூடுதல் வாக்குச்சாவடிகளை ஏற்படுத்த வேண்டிய நிலை இருப்பது குறித்தும், அதற்காக கூடுதல் பணியாளர்கள் நியமிக்க வேண்டியது குறித்தும் அதிகாரிகளுடன் தேர்தல் கமிஷனர்கள் ஆலோசனை நடத்தினர்.

அதேபோன்று, 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகளை சுதந்திரமான முறையில் பதிவு செய்வதற்கு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தேர்தலில் தபால் ஓட்டு பதிவில் முறைகேடு - தி.மு.க. புகார்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தேர்தலில் தபால் ஓட்டு பதிவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தி.மு.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
2. கேரளாவில் 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் 30-ந் தேதி நடைபெறும் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
கேரளாவில் 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் 30-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
3. ‘‘தி.மு.க. நேரத்துக்கு ஏற்றபடி மாறிக்கொள்ளும் கட்சி’’ நீலகிரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கு
‘‘ஜனாதிபதி தேர்தலில் அப்துல்கலாமுக்கு எதிராக வாக்களித்த தி.மு.க., நேரத்துக்கு ஏற்றபடி மாறிக்கொள்ளும் கட்சி’’, என்று நீலகிரி தேர்தல் பிரசாரத்தின்போது எடப்பாடி பழனிசாமி பேசினார்.
4. மேற்கு வங்காளம், அசாமில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல்
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமிலும் இன்று 2- ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
5. மேற்கு வங்காளம், அசாமில் நாளை இரண்டாம் கட்ட தேர்தல்
அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகவும், மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாகவும் சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது.