மாநில செய்திகள்

பிப்ரவரி 27 முதல் நெல்லை-மும்பை இடையே வாரம் மூன்று நாள் சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு + "||" + Special train to run between Tirunelveli and Mumbai three days a week from February 27

பிப்ரவரி 27 முதல் நெல்லை-மும்பை இடையே வாரம் மூன்று நாள் சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு

பிப்ரவரி 27 முதல் நெல்லை-மும்பை இடையே வாரம் மூன்று நாள் சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு
நெல்லை-மும்பை இடையே வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி முதல் வாரம் மூன்று நாள் சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை,

தெற்கு ரயில்வே மதுரைக் கோட்டத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, நெல்லை-மும்பை இடையே வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி முதல் வாரம் மூன்று நாள் சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் இருந்து மும்பை வரை ஏற்கனவே ஒரு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தற்போது கூடுதலாக சேலம், தர்மபுரி, ஹூப்ளி வழியாக வாரத்திற்கு மூன்று முறை நெல்லையில் இருந்து மும்பைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இதன்படி (வண்டி எண் 01021 ) தாதர் - நெல்லை வாரம் மும்முறை சிறப்பு ரயில் பிப்ரவரி 27 முதல் சனி, செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் இரவு 9.30 மணிக்குப் புறப்பட்டு திங்கள், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 11.40 மணிக்கு நெல்லைக்கு வந்து சேரும். 

மறுமார்க்கத்தில் (வண்டி எண் 01022) நெல்லை- தாதர் வாரம் மும்முறை சிறப்பு ரயில் மார்ச் 1 முதல் திங்கள், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 3 மணிக்குப் புறப்பட்டு புதன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 5.30 மணிக்கு தாதர் சென்று சேரும்.

இந்த ரயில்கள் கல்யாண், புனே, ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு அவசியம் என மதுரைக் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மும்பையில் பகல் நேரத்திலும் 144 தடை உத்தரவு
மும்பையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பகல் நேரத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
2. மும்பையில் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சம்; ஒரேநாளில் 8,626 பேருக்கு கொரோனா; தாராவியில் 71 பேருக்கு பாதிப்பு
மும்பையில் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக புதிதாக 8,626 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தாராவியில் புதிதாக 71 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
3. மராட்டியத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 37 ஆயிரத்தை நெருங்கியது
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத வகையில் பதிவாகியுள்ளது.
4. ஒரேநாளில் 5,504 பேருக்கு கொரோனா; மும்பையில் தினமும் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு
மும்பையில் ஒரேநாளில் 5,504 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தாராவியில் 58 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நகரில் தினமும் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
5. கொரோனா பரவல் எதிரொலி: மும்பையில் பொது இடங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை
மும்பையில் கொரோனா தொற்றின் 2-வது அலையை கட்டுப்படுத்த பொது இடங்களில் கட்டாய பரிசோதனை செய்யப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.