தேசிய செய்திகள்

ஆந்திர மாநில நகராட்சி தேர்தல்: மார்ச் 10ம் தேதி நடைபெறுகிறது - மாநில தேர்தல் ஆணையம் + "||" + Andhra Pradesh municipal polls to be held on March 10, counting on March 14

ஆந்திர மாநில நகராட்சி தேர்தல்: மார்ச் 10ம் தேதி நடைபெறுகிறது - மாநில தேர்தல் ஆணையம்

ஆந்திர மாநில நகராட்சி தேர்தல்: மார்ச் 10ம் தேதி நடைபெறுகிறது - மாநில தேர்தல் ஆணையம்
ஆந்திர மாநில நகராட்சி தேர்தல் மார்ச் 10ம் தேதி அன்று நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
விஜயவாடா, 

ஆந்திராவில் 12 மாநகராட்சிகள் மற்றும் 75 நகராட்சிகள் மற்றும் நகர் பஞ்சாயத்துகளுக்கு தேர்தலுக்கான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. இதன்படி தேர்தல்களில் வாக்குப்பதிவு மார்ச் 10ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 14ம் தேதியும் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் நிம்மகட்டா ரமேஷ் குமார் தெரிவிக்கையில், கொரோனாவிக்கு பின் நிலைமை சீரடைந்துள்ளதால், கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சித் தேர்தல் தற்போது நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. வேட்புமனு வாபஸ் பெறுவது மார்ச் 2 ஆம் தேதி தொடங்கி மார்ச் 3 ஆம் தேதி மாலை 3 மணி வரை முடிவடையும். பிற்பகல் 3 மணிக்குப் பிறகு, போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் அறிவிக்கப்படும். மார்ச் 10 ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும், ஏதேனும் இருந்தால், மார்ச் 13 அன்று வாக்களிப்பு நடைபெறும் என்று தெரிவித்தார். 

ஏற்கனவே மாநிலம் முழுவதும் உள்ள பஞ்சாயத்துகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதில் இரண்டு நிறைவடைந்துள்ளன.

ஆந்திர மாநிலத்தில் விஜயநகரம், எலுரு, மச்சிலிபட்னம், குண்டூர், ஓங்கோல், திருப்பதி, சித்தூர், கடப்பா, கர்னூல், அனந்தபூர், விசாகப்பட்டினம் பெருமாநகராட்சி மற்றும் விஜயவாடா பெருமாநகராட்சி ஆகிய 12 மாநகராட்சிகள் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தேர்தலில் தபால் ஓட்டு பதிவில் முறைகேடு - தி.மு.க. புகார்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தேர்தலில் தபால் ஓட்டு பதிவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தி.மு.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
2. கேரளாவில் 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் 30-ந் தேதி நடைபெறும் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
கேரளாவில் 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் 30-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
3. ‘‘தி.மு.க. நேரத்துக்கு ஏற்றபடி மாறிக்கொள்ளும் கட்சி’’ நீலகிரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கு
‘‘ஜனாதிபதி தேர்தலில் அப்துல்கலாமுக்கு எதிராக வாக்களித்த தி.மு.க., நேரத்துக்கு ஏற்றபடி மாறிக்கொள்ளும் கட்சி’’, என்று நீலகிரி தேர்தல் பிரசாரத்தின்போது எடப்பாடி பழனிசாமி பேசினார்.
4. மேற்கு வங்காளம், அசாமில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல்
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமிலும் இன்று 2- ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
5. மேற்கு வங்காளம், அசாமில் நாளை இரண்டாம் கட்ட தேர்தல்
அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகவும், மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாகவும் சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது.