தேசிய செய்திகள்

டெல்லி, ஆந்திரா, கர்நாடகாவில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் + "||" + Current corona vulnerability situation in Delhi, Andhra Pradesh and Karnataka

டெல்லி, ஆந்திரா, கர்நாடகாவில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

டெல்லி, ஆந்திரா, கர்நாடகாவில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
டெல்லி, ஆந்திரா, கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு இன்றைய நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி, 

டெல்லி, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தோர், குணமடைந்தவர்களின் இன்றைய நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி ஆந்திர மாநிலத்தில் இன்று புதிதாக 30 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,88,899 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 695 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 69 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில் இதுவரை 8,81,041 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இதுவரை 7,163 பேர் பலியாகி உள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் இன்று புதிதாக 368 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் மேலும் 2 பேர் பலியாகினர். இதன்மூலம் பலியானோர் எண்ணிக்கை 12,267 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகத்தில் இதுவரை மொத்தம் 9,45,638 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9,27,580 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு தற்போது 5,772 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லி மாநிலத்தில் இன்று புதிதாக 141 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 6,37,087 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் 2 பேர் பலியாகினர். இதன்மூலம் பலியானோர் எண்ணிக்கை 10,893 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் கொரோனா பாதிப்பில் இருந்து 6,25,158 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு தற்போது 1,036 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்


தொடர்புடைய செய்திகள்

1. மும்பை-டெல்லியில் நட்சத்திர ஓட்டல்கள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றம்
மும்பை-டெல்லியில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலையடுத்து, அங்குள்ள 2 நட்சத்திர ஓட்டல்களை கொரோனா வைரஸ் சிகிச்சையளிக்கும் மையங்களாக மும்பை மாநகராட்சி மாற்றியுள்ளது.
2. டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல் - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
3. தலைநகர் டெல்லியில் இன்று 13 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு
டெல்லியில் இன்று ஒரே நாளில் 13,468 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 11,491- பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 11,491- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. டெல்லியில் மேலும் 10,774- பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 10,774- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.