மாநில செய்திகள்

தூத்துக்குடி அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு + "||" + Truck accident near Thoothukudi: Rs 1 lakh relief for families of 5 victims - Chief Minister Palanisamy

தூத்துக்குடி அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

தூத்துக்குடி அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் அருகே நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சியில் காட்டு வேலைக்கு விவசாய கூலித் தொழிலாளர்களை அழைத்துச் சென்ற சரக்கு வாகனம் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தில் மணக்காடு-மணப்படை ஊரைச் சேர்ந்த 5 பெண்கள் பலியாகினர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவர்கள் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காயமடைந்தவர்கள் ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், பலத்த காயம் அடைந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி, தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.  


தொடர்புடைய செய்திகள்

1. தனியார் கம்பெனியில் தீ விபத்து 10 மின்சார மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்
மதுரவாயல் அருகே தனியார் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10-க்கும் மேற்பட்ட மின்சார மோட்டார்சைக்கிள்கள் எரிந்து நாசமாயின.
2. தனியார் கம்பெனியில் தீ விபத்து 10 மின்சார மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்
மதுரவாயல் அருகே தனியார் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10-க்கும் மேற்பட்ட மின்சார மோட்டார்சைக்கிள்கள் எரிந்து நாசமாயின.
3. வடக்கு மாசிடோனியாவில் கொரோனா ஆஸ்பத்திரியில் பயங்கர தீ விபத்து
வடக்கு மாசிடோனியாவில் கொரோனா ஆஸ்பத்திரியில் பயங்கர தீ விபத்து 14 பேர் பலி.
4. பேக்கரி கடையில் தீ விபத்து
பேக்கரி கடையில் தீ விபத்து.
5. சென்னை அருகே கோர விபத்து: 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி
சென்னை தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் லாரி மீது கார் மோதிய விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகினர்.