தேசிய செய்திகள்

இந்தியாவை உலகநாடுகள் தற்போது, மிகுந்த நம்பிக்கையுடன் பார்த்து வருகிறது - பிரதமர் மோடி + "||" + Your code kept world running when chips were down': PM Modi to IT captains at NASSCOM NTLF event

இந்தியாவை உலகநாடுகள் தற்போது, மிகுந்த நம்பிக்கையுடன் பார்த்து வருகிறது - பிரதமர் மோடி

இந்தியாவை உலகநாடுகள் தற்போது, மிகுந்த நம்பிக்கையுடன் பார்த்து வருகிறது - பிரதமர் மோடி
இந்தியாவை உலகநாடுகள் தற்போது, மிகுந்த நம்பிக்கையுடன் பார்த்து வருகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி,

நாஸ்காம் தொழில்நுட்ப மற்றும் தலைமைத்துவ மன்றத்தில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:  தொழில்நுட்பத் துறையில் பல்வேறு கொள்கைகள் மற்றும் முடிவுகளை அரசு எடுத்துள்ளது. நவீன தொழில்நுட்பத்தை கொண்டு வேளாண் மற்றும் சுகாதார துறைகளுக்கு உதவ வேண்டும். 

இந்தியாவை உலகநாடுகள் தற்போது, மிகுந்த நம்பிக்கையுடன் பார்த்து வருகிறது. சவால்களை கண்டு பயந்து ஒதுங்கவோ, பலவீனமாகவோ நம்மை நாமே கருதக்கூடாது. நமது அறிவியலும் தொழில்நுட்பமும் நிரூபித்தது மட்டும் இல்லாமல் மேம்படவும் செய்திருக்கிறது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக எல்லா துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், நீங்கள் ( தொழில்நுட்பம்) 2 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளீர்கள். வளர்ச்சி பாதிப்பு இருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ள இந்த  நேரத்தில் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை அதன் வருவாயில் 4 பில்லியன் டாலர்களைச் சேர்த்தால் அது பாராட்டத்தக்கது” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாடு முழுவதும் போதுமான அளவு தடுப்பூசி கிடைப்பதில் அரசு உறுதி - கவர்னர்களுடனான சந்திப்பில் பிரதமர் மோடி தகவல்
நாடு முழுவதும் போதுமான அளவு தடுப்பூசி கிடைக்க அரசு உறுதிபூண்டுள்ளதாக கவர்னர்களுடனான சந்திப்பின்போது பிரதமர் மோடி கூறினார்.
2. அனைத்து மாநில ஆளுநர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி குறித்து மாநில ஆளுநர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
3. திறன்மிக்க இளைஞர்களின் பங்கு அதிகரிப்பு - பிரதமர் மோடி
இந்தியா தற்சார்பு பாதையில் பயணிப்பதில் திறன்மிக்க இளைஞர்களின் பங்கு அதிகரித்து வருகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
4. நவராத்திரி, யுகாதி பண்டிகைகளை ஒட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
நவராத்திரி, யுகாதி உள்ளிட்ட பண்டிகைகளை ஒட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
5. இந்தியாவில் கொரோனாவின் பிடியில் இருந்து ஒரே நாளில் 97 ஆயிரம் பேர் குணம் அடைந்தனர்; புதிதாக 1.61 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று
இந்தியாவில் கொரோனா வைரஸ் கோரப்பிடியில் இருந்து ஒரே நாளில் 97 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணம் அடைந்தனர். அதே நேரத்தில் புதிதாக 1.61 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று பாதித்துள்ளது.