தேசிய செய்திகள்

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்; இந்தியா பதிலடி + "||" + Pakistani army attack on the border; India retaliates

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்; இந்தியா பதிலடி

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்; இந்தியா பதிலடி
பாகிஸ்தான் ராணுவம் எல்லைப் பகுதியில் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.
ஜம்மு,

ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் சர்வதேச எல்லையோர கிராமங்கள் மற்றும் நிலைகளை குறி வைத்து, பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீர் தாக்குதல் நடத்தினர். ஹிராநகர் செக்டாரில் போபியா பகுதியில் சனிக்கிழமை இரவு 10.25 மணி அளவில் இந்த அத்துமீறல் தாக்குதல் நடந்தது. 

இந்த தாக்குதலுக்கு இந்திய எல்லைக்காவல் படையினர் பதிலடி தாக்குதல் தொடுத்தனர். அதிகாலை 4.30 மணி வரை இரு எல்லைகள் இடையே துப்பாக்கிச் சத்தம் கேட்ட வண்ணம் இருந்தது. இருந்தாலும் சேத விவரங்கள் பற்றி எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவதால், எல்லையோரம் வசிப்பவர்கள், இரவு நேரத்தில் பதுங்கு குழிகளில் வசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளதாக இந்திய ராணுவ அதிகாரிகள் கூறினர்.

தொடர்புடைய செய்திகள்

1. எல்லையில் படைகளை விலக்கிக் கொள்வது குறித்து இந்தியா-சீனா இடையே பேச்சுவார்த்தை
எல்லையில் படைகளை விலக்கிக் கொள்வது குறித்து இந்தியா-சீனா ராணுவ பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
2. எல்லையில் இந்திய ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு
இந்திய ராணுவம் எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியதாக, பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.
3. குடியரசு தினம்: வாகா எல்லையில் தேசிய கொடி இறக்கும் நிகழ்ச்சியை காண திரண்ட பொதுமக்கள்
நாட்டின் 72வது குடியரசு தின நிகழ்ச்சியை முன்னிட்டு வாகா எல்லையில் தேசிய கொடியை இறக்கும் நிகழ்வை காண பொதுமக்கள் திரளாக கூடினர்.
4. இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்
காஷ்மீரில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் இந்திய எல்லைப் பகுதிக்குள் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை