மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க பொது மக்களே காரணம் - சுகாதாரத்துறை அதிகாரிகள் குற்றச்சாட்டு + "||" + The general public is responsible for the increase in the incidence of corona in the Maharastra - Health Department blamed
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க பொது மக்களே காரணம் - சுகாதாரத்துறை அதிகாரிகள் குற்றச்சாட்டு
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க பொது மக்களே காரணம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மும்பை,
மராட்டியத்தில் கொரோனா பரவல் கட்டுபடுத்தப்பட்டு இருந்தது. இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக மாநிலத்தில் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கி உள்ளது. இதேபோல தலைநகர் மும்பையிலும் தொற்று பாதிப்பு அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்ததற்கு பொதுமக்களே காரணம் என சுகாதாரத்துறை வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து மாநில கொரோனா பரவல் கட்டுப்பாட்டு அதிகாரி சஞ்சய் ஒக் கூறும்போது, "பொது மக்கள் கொரோனா காலத்தில் நடந்து கொள்ளவேண்டிய முறைப்படி நடந்து கொள்ளவில்லை. அவர்கள் தங்களை தற்காத்து கொள்ள வேண்டும் " என்றார்.
இதேபோல சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் பிரதிப் வியாஸ் கூறுகையில், பொது மக்களின் ஒழுக்கமற்ற தன்மையும் மற்றும் அலட்சியமும் தான் தொற்று பாதிப்பு உயர்வுக்கு காரணம். பொதுமக்களிடம் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதில் போதுமான விழிப்புணர்வு இல்லை. பொது மக்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றவில்லை. கொரோனா வைரஸ் இன்னும் நம்மிடம் உள்ளது என்பதை அதிகாரிகள் மக்களிடம் கூற வேண்டும்" என்றார்.