மாநில செய்திகள்

இந்தாண்டில் சேலம்-சென்னை விரைவு சாலை விரிவாக்க பணிகள் தொடங்கப்படும் - மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தகவல் + "||" + Salem-Chennai Expressway expansion work to begin this year - Union Minister Rajnath Singh

இந்தாண்டில் சேலம்-சென்னை விரைவு சாலை விரிவாக்க பணிகள் தொடங்கப்படும் - மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தகவல்

இந்தாண்டில் சேலம்-சென்னை விரைவு சாலை விரிவாக்க பணிகள் தொடங்கப்படும் - மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தகவல்
இந்தாண்டில் சேலம்-சென்னை இடையே விரைவு சாலை விரிவாக்க பணிகள் தொடங்கப்படும் என்று சேலத்தில் நடந்த பா.ஜனதா கட்சி இளைஞரணி மாநாட்டில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
சேலம்,

சேலத்தில் பா.ஜனதா கட்சியின் இளைஞரணி மாநில மாநாடு நேற்று மாலை நடந்தது. இதில், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்திய நாட்டில் மேம்பாடும், நல்லாட்சியும் மிகவும் அத்தியாவசியமானதாகும். பிரதமர் மோடியின் ஈடு இணையற்ற மேம்பாட்டுக்கான திட்டங்கள், நல்லாட்சி எப்போது உணரமுடியும் என்றால் சாதாரண நாட்களில் இல்லை. பிரச்சினையான நாட்கள் வரும்போது தான் இந்த மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் நல்லாட்சியை உணரமுடியும்.

அதாவது, கொரோனா காலக்கட்டத்தில் பிரதமர் மோடியின் அரசு, எவ்வளவு சிறப்பாக செயல்பட்டது என்பதை எடுத்துக்காட்டாக கூறலாம். கொரோனாவுக்கு மட்டும் எதிராக போரிட்டு வரவில்லை. கொரோனாவுக்கு தடுப்பூசியை கண்டுபிடித்து அதில் வெற்றி பெற்றிருக்கிறோம்.

நம் இந்திய மக்களுக்காக மருந்து அல்ல. உலக நாடுகளையும் நம் குடும்பமாக கருதி பிற நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசியை கொடுத்து வருகிறோம். கொரோனாவால் நமது சுகாதாரம் கெட்டதோடு மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. அதை சரிகட்ட மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஊரக பகுதியில் விவசாயிகளின் நலன் கருதி அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. நாட்டில் எவர் வீட்டில் கழிவறை இல்லையோ? அவர் வீட்டில் கழிவறையும், யாருக்கு வீடு இல்லையோ அவர்களுக்கு வீடுகளும் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வு முன்னேறவும், அவர்களது வருமானம் இரட்டிப்பு ஆக வேண்டும் என்பதற்காகவும் பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

நாட்டில் ஊரகம் மற்றும் நகர்ப்புற கட்டமைப்புக்காக ரூ.100 லட்சம் கோடி செலவிடப்பட இருக்கிறது. அதன்படி சேலம்-சென்னை சாலை விரிவாக்க பணிகள் இவ்வாண்டில் (2021-2022-ம் ஆண்டில்) மேற்கொள்ளப்படும். நாம் அரசியல் நடத்துவது என்பது அதிகாரத்திற்கு வருவதற்காகவும், ஓட்டு வாங்குவதற்காகவும் அல்ல. அரசியல் நடத்துவது என்பது இந்த நாட்டை முன்னேற்றவதற்காகதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேசினார்.