தேசிய செய்திகள்

புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆலோசனை + "||" + Puducherry CM V.Narayanasamy leaves for the Legislative Assembly from his residence

புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆலோசனை

புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆலோசனை
புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

புதுச்சேரி,

புதுவையில் எம்.எல்.ஏ.க் கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததால் ஏற்கனவே காங்கிரசின் பலம் குறைந்து இருந்த நிலையில் தற்போது மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகினர். இதனால் பெரும்பான்மையை நிரூபிப்பதில் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு சிக்கல் எழுந்துள்ளது.

அதாவது, சட்டசபையில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களின் பலம் 12 ஆக குறைந்துள்ளது. எனவே இனிமேல் முதல்-அமைச்சர் நாராயணசாமியால் மெஜாரிட்டியை நிரூபிக்க வாய்ப்பில்லை என தெரிய வந்ததுள்ளது.

நம்பிக்கையை இழந்த முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளார். இன்று சட்டசபையை கூட்டுவதற்கு முன்பே அவர் ராஜினாமா செய்வார் அல்லது சட்டசபை கூட்டத்தில் தனது தரப்பு விளக்கத்தை தெரிவித்து விட்டு ராஜினாமா செய்யலாம் என தெரிகிறது.

இந்நிலையில்,பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழலில் ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் முதல்-மந்திரி நாராயணசாமி துணை சபாநாயகர் பாலன் இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

புதுச்சேரியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், நாராயணசாமி தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

புதுச்சேரி சட்டப்பேரவை பலம் தற்போதைய எண்ணிக்கை  மொத்தம் 26,

காங்கிரஸ் கூட்டணி 12 , காங்கிரஸ் 9, திமுக 2, சுயேட்சை 1,

எதிர்க்கட்சிகள் - 14 என்.ஆர்.காங்கிரஸ் 7, அதிமுக 4, பாஜக நியமன உறுப்பினர் 3,