மாநில செய்திகள்

"தேர்தல் நேரத்தில் மனம் குளிர நிறைய அறிவிப்புகள் வரும்" - முதலமைச்சர் உறுதி + "||" + "A lot of cool announcements will come at election time" - the Chief Minister assured

"தேர்தல் நேரத்தில் மனம் குளிர நிறைய அறிவிப்புகள் வரும்" - முதலமைச்சர் உறுதி

"தேர்தல் நேரத்தில் மனம் குளிர நிறைய அறிவிப்புகள் வரும்"  - முதலமைச்சர் உறுதி
தேர்தல் நேரத்தில் மக்கள் மனம் குளிர இன்னும் ஏராளமான அறிவிப்புகள் வரும் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கபிலர்மலையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்தார். 

அங்குள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே திறந்த வேனில் நின்றவாறு அவர் பேசியதாவது:-

சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. சிறந்த தலைவர்களுக்கு மணிமண்டபம், சிலைகள் அமைத்து வருகிறோம். அந்த வகையில் அல்லாள இளைய நாயக்கருக்கும் விரைவில் சிலை திறக்க உள்ளோம்.

தமிழகத்தில் வீடுகள் இல்லாத ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். எத்தனை வீடுகள் வேண்டுமானாலும் கட்டி தருவதற்கு பிரதமர் மோடி உறுதி அளித்து உள்ளார். தேர்தல் நேரத்தில் மக்கள் மனம் குளிர இன்னும் ஏராளமான அறிவிப்புகள் வரும். விவசாயிகள் ஏற்றம் பெற அரசு துணை நிற்கும். வருகிற சட்டசபை தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் மலர செய்ய வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை