தேசிய செய்திகள்

புதுச்சேரி காங்கிரஸ் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு: பரபரப்பான சூழலில் சட்டப்பேரவை கூடியது + "||" + No-confidence vote on Pondicherry Congress government

புதுச்சேரி காங்கிரஸ் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு: பரபரப்பான சூழலில் சட்டப்பேரவை கூடியது

புதுச்சேரி காங்கிரஸ் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு: பரபரப்பான சூழலில் சட்டப்பேரவை கூடியது
பெரும்பான்மையை நிரூபிக்க புதுச்சேரி சட்டப்பேரவைக்கு முதல்-மந்திரி நாராயணசாமி வருகை தந்தார்.
புதுச்சேரி,

புதுச்சேரியில் முதல்-மந்திரி நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

அரசுக்கு ஆதரவளித்து வரும் எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து பதவி விலகி வரும் நிலையில், இன்று காலை 10 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்புக்காக சட்டப்பேரவை கூடியது. சட்டசபைக்கு அதிமுக, திமுக, என்.ஆர்.காங்கிரஸ், பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் வருகை தந்தனர். எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமியும் சட்டப்பேரவைக்கு வந்தார்.

இதில் வெற்றி பெற்று நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு தப்புமா அல்லது அமைச்சரவை ராஜினாமா செய்யுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இருப்பினும் ஆளுங்கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால் தார்மீக பொறுப்பேற்று முதல்-அமைச்சர் நாராயணசாமி பதவி விலகவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.  இதனால் புதுவை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் கூறியதாவது:-

ஆட்சியமைக்க உரிமை கோருவது பற்றி இதுவரை முடிவு எடுக்கவில்லை என்றார்.

அமைச்சர் கந்தசாமி கூறுகையில், நியமன எம்.எல்.ஏக்கள் தொடர்பாக எடுக்கப்படும் முடிவை பொறுத்து எங்கள் நிலைபாடு இருக்கும். புதுச்சேரி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என அமைச்சர் கந்தசாமி கூறினார். 

அனைத்திற்கும் புதுச்சேரி முதல்-மந்திரி  நாராயணசாமியின் அலட்சியமே காரணம் என- நமச்சிவாயம், (பாஜக) கூறினார்.