தேசிய செய்திகள்

புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் கூடியது: நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார் முதல்-மந்திரி நாராயணசாமி + "||" + Special meeting of the Puducherry Legislative Assembly

புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் கூடியது: நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார் முதல்-மந்திரி நாராயணசாமி

புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் கூடியது: நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார் முதல்-மந்திரி நாராயணசாமி
புதுச்சேரி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தை முதல்-மந்திரி நாராயணசாமி முன்மொழிந்தார்.
புதுச்சேரி,

புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் கூடியது. பெரும்பான்மையை நிரூபிக்க இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தின் மீது முதல்-மந்திரி நாராயணசாமி பேசியதாவது:-

மக்களுக்காக தொடர்ந்து பல நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.புதுச்சேரி மக்கள் எங்கள் ஆட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி விட்டு சென்ற பணிகள், திட்டங்களை நிறைவேற்றினோம்.

பல்வேறு திட்டங்களுக்கு ஆளுநராக இருந்த கிரண்பேடி தடையாக இருந்தார். கிரண்பேடி மூலம் அரசுக்கு தொல்லை கொடுக்கப்பட்டது.கிரண்பேடி அளித்த நெருக்கடியை கடந்தும் ஆட்சியை நிறைவு செய்துள்ளோம்.

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை உள்ளது.மத்திய அரசிடம் இருந்து புதுச்சேரி மாநிலத்திற்கு போதிய நிதி கிடைக்கவில்லை. 4 ஆண்டுகளாக எங்களை எதிர்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் தற்போது அஸ்திரங்களை எடுத்துள்ளன. தேர்தலில் வெற்றி பெறாத எதிர்க்கட்சி தற்போது சதி செய்து வருகிறது. மிகுந்த நெருக்கடிக்கு மத்தியில் மக்களின் நலனுக்காக ஆட்சி செய்தேன்.

கடந்த ஆட்சி செய்ய தவறிய திட்டங்களை நாங்கள் நிறைவேற்றினோம். கொரோனா காலத்தில் புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்கப்பட்டது என்றார்.