தேசிய செய்திகள்

புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையை இழந்தது + "||" + It is clear that people of Puducherry trust us Puducherry CM V.Narayanasamy in assembly

புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையை இழந்தது

புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையை இழந்தது
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையை இழந்ததாக பேரவையில் சபாநாயகர் அறிவித்தார்.
புதுச்சேரி,

புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் கூடியது. பெரும்பான்மையை நிரூபிக்க இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் நாராயணசாமி கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியால் நாராயணசாமி உள்ளிட்டோர் பேரவையில் இருந்து வெளியேறினர். 

மத்திய பாஜக அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் மீது கடும் விமர்சனங்களை முன் வைத்துப்பேசிய முதல்-மந்திரி நாராயணசாமி பேரவையில் இருந்து தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் வெளியேறினார். புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.